சனிக்கிழமையில் இந்த பொருட்களை வாங்கி விடாதீர்கள்..?

sanikilamai vanka kudatha porul

நவகிரகங்களில் மற்ற கிரகங்களை காட்டிலும் சனிபகவான் நீண்ட காலம் ஒரே ராசியில் அமர்ந்து சுப மற்றும் அசுப பலன்களை தரக்கூடியவர்.

சனிபகவானுடன் தொடர்புடைய எந்த பொருட்களையும் சனிக்கிழமைகளில் வாங்குவது சிறந்தது அல்ல. அதே சமயம் சனிக்கிழமைகளில் ஒரு சில விஷயங்களை செய்யக்கூடாது மற்றும் வாங்கக்கூடாது. அப்படி சனிக்கிழமையில் எந்த பொருட்களை ஏன் வாங்க கூடாத என்பதை பற்றி தெறித்து கொள்வோம்.

உப்பு

uppu
உப்பு

 

உப்பில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். அதனால் வெள்ளிகிழமையில் மட்டுமே வாங்க வேண்டும். உப்பை சனிக்கிழமையில் வாங்கினால் தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் நஷ்டங்களை சந்திப்பார்கள்.

இரும்பு

iran
இரும்பு

இரும்பு என்பது சனிபகவானுடைய ஆதிக்கம் செலுத்தும் பொருளாகும். எனவே இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை  சனிக்கிழமையில் கட்டாயம் வாங்கவே கூடாது. அப்படி வாங்கினால் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களிடையே சண்டை, சச்சரவுகள் ஏற்படும்.

சனிக்கிழமைகளில் இரும்பு பொருட்களை மற்றவர்களுக்கு தானமாக வழங்கினால் தீராத கடன் தீரும் என்பது நம்பிக்கை.

எள்ளு

ellu
எள்ளு

சனிக்கிழமைகளில் கருப்பு எள்ளு விளக்கேற்றி சனிபகவானை வழிபட்டால், அவரின் அருளைப் பெறலாம்.

கருப்பு எள்ளு, கருப்பு உளுந்து, எள் எண்ணெய் போன்ற பொருட்களை சனிக்கிழமைகளில் வாங்கக்கூடாது. வாங்கினால், அது வாழ்வில் பல தடைகள், சிரமங்கள் மற்றும் கஷ்டங்களை எதிர்கொள்ள வைக்கும்.

வேண்டுமானால் இந்த பொருட்களை சனிக்கிழமைகளில் தானமாக வழங்குவது மிகவும் நன்மையளிக்கும்.

இதையும் படிக்கலாம் : எந்த கிழமையில் எந்த பொருளை வாங்கினால் அதிர்ஷ்டம்!!

எண்ணெய்

சனிக்கிழமையில் தலைக்கு எண்ணெய் வைத்து குளித்தால் தோஷங்கள் நீங்குமாம். ஆனால் சனிக்கிழமை எண்ணெய் வாங்கக்கூடாது.

எந்த எண்ணெயாக இருந்தாலும் சனிக்கிழமைகளில் வாங்கும் பொழுது அடிக்கடி கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

மாவு பொருட்கள்

சனிக்கிழமையில் மாவுப்பொருட்களை வாங்க கூடாது. அப்படி வாங்கினால் எதிர்பார்க்கும் காரியங்கள் நிறைவேறாமல் போவதற்கு வாய்ப்புகள் உண்டு. மேலும் நினைத்த காரியங்களில் இடையூறுகள் ஏற்படும்.

கருப்பு நிற பொருட்கள்

சனிக்கிழமைகளில் கருப்பு நிறப்பொருட்களை வாங்கக்கூடாது. அப்படி வாங்கினால் வீட்டில் கஷ்டத்தை அதிகரிக்கும். ஆனால் கருப்பு நிற பொருட்களை தானம் செய்யலாம்.

சனிக்கிழமையில் ஆயுதங்கள், கூர்மையான பொருட்களை வாங்கக்கூடாது. அதுபோலவே வீட்டை சுத்தம் செய்யக் கூடிய பொருட்களையும் வாங்கக்கூடாது.

மேலும் படிக்க : எந்தெந்த ராசிக்கு எந்த கடவுளை வணங்கினால் அதிஷ்டம் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *