எந்தெந்த ராசிக்கு எந்த கடவுளை வணங்க வேண்டும்..!

எந்தெந்த ராசிக்கு எந்த கடவுளை வணங்கினால் அதிஷ்டம் தெரியுமா

ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு கிரகம் இருக்கும் மேலும் அது முக்கியத்துவம் பெற்றிருக்கும். எனவே அந்த கிரகத்தின் அதிபதியாக விளங்கும் கடவுளை ஒருவர் வணங்குவதன் மூலம் பலவித அதிஷ்டங்கள் அவர்களது வாழ்வில் வந்து சேரும் என்று ஜோதிட ரீதியாக சொல்லப்படுகிறது.

மேஷம்

மேஷ ராசியை ஆளும் கிரகம் செவ்வாய். செவ்வாயின் பலத்தை அதிகரிக்க, சிவனை வணங்கினால் சிறந்த பலன் உண்டு.

ரிஷபம்

ரிஷப ராசியை ஆளும் கிரகம் சுக்கிரன். சுக்கிரனின் பலத்தை அதிகரிக்க, லட்சுமி தேவியை வணங்கினால் அதிர்ஷ்டம் கொட்டுவதோடு, நேர்மறை ஆற்றலும் அதிகரிக்கும்.

மிதுனம்

மிதுன ராசியை ஆளும் கிரகம் புதன். புதனின் பலத்தை அதிகரிக்க, ஸ்ரீமன் நாராயணனை வணங்கினால் வாழ்வில் எப்போதும் வெற்றிக்கிட்டும்.

கடகம்

கடக ராசியை ஆளும் கிரகம் சந்திரன். சந்திரனின் பலத்தை அதிகரிக்க, கௌரி அம்மனை வணங்கினால் அனைத்து ஆசைகளும் நிறைவேறும்.

சிம்மம்

சிம்ம ராசியை ஆளும் கிரகம் சூரியன். சூரியனின் பலத்தை அதிகரிக்க, சிவபெருமானை வணங்கினால் வாழ்க்கையில் நல்ல நிலையை அடையலாம்.

மேலும் படிக்க : நவகிரகங்களுக்கு உரிய நவதானிய தானங்கள்

கன்னி

கன்னி ராசியை ஆளும் கிரகம் புதன். புதனின் பலத்தை அதிகரிக்க, ஸ்ரீமன் நாராயணனை வணங்கினால் அனைத்திலும் வெற்றிகள் மற்றும் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருகும்.

துலாம்

துலாம் ராசியை ஆளும் கிரகம் சுக்கிரன். சுக்கிரனின் பலத்தை அதிகரிக்க, லட்சுமி தேவியை வணங்கினால் அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் பெருகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியை ஆளும் கிரகம் செவ்வாய். செவ்வாயின் பலத்தை அதிகரிக்க, சிவனை வணங்கினால் அதிர்ஷ்டம் பெருகும்.

தனுசு

தனுசு ராசியை ஆளும் கிரகம் குரு. குருவின் பலத்தை அதிகரிக்க, சிவனின் அவதாரமான தட்சிணாமூர்த்தியை வணங்கினால் வாழ்வில் செல்வம், மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் கிடைக்கும்.

மகரம்

மகர ராசியை ஆளும் கிரகம் சனி. சனியின் பலத்தை அதிகரிக்க, சிவபெருமானை வணங்கினால் அனைத்து வளங்களையும் பெறலாம்.

கும்பம்

கும்ப ராசியை ஆளும் கிரகம் சனி. சனியின் பலத்தை அதிகரிக்க, சிவபெருமானை வணங்கினால் எதிலும் நன்மை கிட்டும்.

மீனம்

மீன ராசியை ஆளும் கிரகம் குரு. குருவின் பலத்தை அதிகரிக்க, தட்சிணாமூர்த்தியை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *