எந்த கிழமையில் எந்த பொருளை வாங்கினால் அதிர்ஷ்டம்

yentha kilamaiyil yenna porul vankinaal athishtam

நவக்கிரகங்களில் ஏழு கிழமைகளுக்கும் ஒவ்வொரு தன்மைகள் இருக்கும். அதே போல ஒவ்வொரு கிழமைகளிலும் ஒவ்வொரு பொருட்கள் வாங்கும் பொழுது நமக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். அதன் அடிப்படையில் 7 நாட்களுக்கும் நாம் வாங்க வேண்டிய பொருட்கள் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்.

ஞாயிற்றுக்கிழமை

ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானை வழிபட்டால் கண் பார்வை குறைபாடுகள் நீக்கும். தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும். கண்ணாடி சார்ந்த பொருட்களை வாங்குவது நல்ல பலன்களைக் கொடுக்கும்.

ஞாயிற்றுக்கிழமையில் சிவப்பு நிறப்பொருட்கள், கோதுமை, வாகனங்கள் ஆகியவற்றை வாங்கலாம்.

திங்கட்கிழமை

திங்கட்கிழமை சிவன் மற்றும் சந்திரனுக்கு உகந்த கிழமை ஆகும். இந்நாட்களில் சந்திரனுக்கு உரிய வெள்ளை பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டத்தை தரும்.

திங்கட்கிழமையில் அரிசி, பால் பொருட்கள், தானியங்கள், மின்சாதன பொருட்கள், எழுதுபொருள் ஆகியவற்றை வாங்கலாம்.

செவ்வாய்க்கிழமை

செவ்வாய்க்கிழமை தேவன் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு உகந்த கிழமை ஆகும். செவ்வாயன்று சொத்துக்கள் வாங்க-விற்க போன்ற விஷயங்களை செய்வது நல்லது.

செவ்வாய் கிழமையில் மரம் சார்ந்த பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டத்தை கொடுக்கும். ஆனால் தோல் பொருட்கள், உலோகங்களை செவ்வாய்க்கிழமையில் வாங்காமல் இருப்பது நல்லது.

இதையும் படிக்கலாம் : மோதிரம் எந்த விரலில் அணியலாம்

புதன்கிழமை

புதன் கிழமை சித்தி, புத்தி  மற்றும் புதனுக்கு உகந்த கிழமை ஆகும். புதனன்று எழுது பொருள், பச்சை காய்கறி, கல்விக்கு தேவையான பொருட்கள், விளையாட்டு பொருட்கள் மற்றும் வீட்டு அலங்கார பொருட்கள் ஆகியவற்றை வாங்குவது யோகத்தைக் கொடுக்கும்.

இந்நாளில் அரிசி, மருந்து, பாத்திரம், வீடு, மனை போன்றவற்றை புதன்கிழமையில் வாங்க கூடாது.

வியாழக்கிழமை

வியாழக்கிழமை குரு பகவான், பிரகஸ்பதிக்கு உகந்த கிழமை ஆகும். இந்நாளில் டிவி, ஃப்ரிட்ஜ், ஏசி, கூலர், கம்ப்யூட்டர், மொபைல் மற்றும் மின் சாதனங்களை வாங்கலாம்.

இந்த கிழமையில், கண்ணாடி சார்ந்த பொருட்களை வாங்க வேண்டாம். மேலும் பூஜை பொருட்கள், கூர்மையான பொருட்கள் ஆகியவற்றை கட்டாயம் வியாழக்கிழமை வாங்க கூடாது.

வெள்ளிக்கிழமை

வெள்ளிக்கிழமை தேவி ஜெகதம்பாவுக்கு உகந்த கிழமை ஆகும். அன்று கல் உப்பு, சமையல் எண்ணெய், நல்லெண்ணெய், வாசனை திரவியம், அழகுசாதனப் பொருட்கள், உலோகங்கள், மரம் சார்ந்த பொருட்கள் மற்றும் வீடு கூட்டும் துடைப்பம் ஆகியவற்றை வாங்குவது செல்வத்தைச் சேர்க்கும்.

இந்நாளில் வாகனங்கள், மசாலா பொருட்கள், கத்தி, கத்தரிக்கோல், இரும்பு சார்ந்த பொருட்களை வாங்க கூடாது. மேலும் வெள்ளிக்கிழமையில் மசாலா அரைத்தால் தரித்திரம் உண்டாகும்.

சனிக்கிழமை

சனிக்கிழமை சனி பகவானுக்கு உகந்த கிழமை ஆகும். அன்று தோட்டம் சார்ந்த பொருட்களை வாங்கலாம்.

சனிக்கிழமையில் கடுமையான எந்த பொருட்களையும் வாங்க கூடாது. வீடு, மனை, உலோக பொருட்கள், உப்பு, எண்ணெய், கருப்பு எள், உலோகம், மரம், துடைப்பம், மசாலா, தோலால் செய்யப்பட்ட பர்ஸ் போன்றவற்றை வாங்க வேண்டாம். இவற்றை சனிக்கிழமையன்று வாங்கினால் கடன், வறுமை, நோய் ஆகிய பிரச்சனைகள் வந்து சேரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *