தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் வேலூர் 8வது தொகுதி ஆகும். இந்தத் தொகுதியில் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் அலுவலகத்தில் இருந்து கணக்கிடப்படாத பெரும் தொகையை மீட்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, இத்தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆணையிட்டார்.
சட்டமன்ற தொகுதிகள்
வேலூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
- வேலூர்
- அணைக்கட்டு
- கே. வி. குப்பம் (தனி)
- குடியாத்தம் (தனி)
- வாணியம்பாடி
- ஆம்பூர்
வாக்காளர்களின் எண்ணிக்கை
தேர்தல் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
16 ஆவது
(2014) |
6,47,299 | 6,58,547 | 20 | 13,05,866 |
17 ஆவது (2019) |
6,90,154 | 7,17,581 | 82 | 14,07,817 |
18 ஆவது
(2024) |
6,13,891 | 6,56,548 | 165 | 12,70,604 |
மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்
ஆண்டு |
கட்சி |
வென்ற வேட்பாளர் |
1951 | காமன்வீல் கட்சி & காங்கிரசு | ராமச்சந்தர் & எம். முத்துகிருஷ்ணன் |
1957 | இருவரும் காங்கிரசு | எம். முத்துகிருஷ்ணன் & என். ஆர். முனியசாமி |
1962 | காங்கிரசு | அப்துல் வாகித் |
1967 | திமுக | குசேலர் |
1971 | திமுக | ஆர். பி. உலகநம்பி |
1977 | நிறுவன காங்கிரசு | வி. தண்டாயுதபாணி |
1980 | சுயேட்சை | ஏ.கே.ஏ. அப்துல் சமது |
1984 | அதிமுக | ஏ.சி.சண்முகம் |
1989 | காங்கிரசு | ஏ.கே.ஏ. அப்துல் சமது |
1991 | காங்கிரசு | அக்பர் பாஷா |
1996 | திமுக | பி. சண்முகம் (வேலூர்) |
1998 | பாட்டாளி மக்கள் கட்சி | என். டி. சண்முகம் |
1999 | பாட்டாளி மக்கள் கட்சி | என். டி. சண்முகம் |
2004 | திமுக | கே. எம். காதர் மொகிதீன் |
2009 | திமுக | எம். அப்துல் ரஹ்மான் |
2014 | அதிமுக | பி. செங்குட்டுவன் |
2019 | திமுக | கதிர் ஆனந்த் |
2024 | திமுக | கதிர் ஆனந்த் |
14 ஆவது மக்களவைத் தேர்தல் (2004)
தி.மு.க வேட்பாளர் கே. எம். காதர் மொகிதீன் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
திமுக | கே. எம். காதர் மொகிதீன் | 4,36,642 |
அதிமுக | சந்தானம் | 2,58,03 |
15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
தி.மு.க வேட்பாளர் எம். அப்துல் ரஹ்மான் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
திமுக | எம். அப்துல் ரஹ்மான் | 3,60,474 |
அதிமுக | வாசு | 2,53,081 |
தேமுதிக | சௌகத் செரிப் | 62,696 |
16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
அ.தி.மு.க வேட்பாளர் பி. செங்குட்டுவன் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
அதிமுக | பி. செங்குட்டுவன் | 3,83,719 |
புதிய நீதிக் கட்சி | ஏ. சி. சண்முகம் | 3,24,326 |
முஸ்லிம் லீக் | அப்துல் ரஹ்மான் | 2,05,896 |
17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
திமுக | கதிர் ஆனந்த் | 4,85,340 |
அதிமுக | ஏ. சி. சண்முகம் | 4,77,199 |
நாம் தமிழர் கட்சி | தீபலக்ஷ்மி | 26,995 |
18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
திமுக | கதிர் ஆனந்த் | 5,68,692 |
புதிய நீதிக் கட்சி | ஏ. சி. சண்முகம் | 3,52,990 |
அதிமுக | பசுபதி | 1,17,682 |
இதையும் படிக்கலாம் : கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி