கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் கிருஷ்ணகிரி 9வது தொகுதி ஆகும். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய தொழில் விவசாயம். தொழில் துறையில் விரைத்து வளரும் மாவட்டமாக இருக்கிறது.

2008 ஆம் ஆண்டின் தொகுதி மறுசீரமைப்புக்கு முன்புவரை, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் ஓசூர், தளி, காவேரிப்பட்டினம், கிருஷ்ணகிரி, பர்கூர், பாலக்கோடு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.

சட்டமன்ற தொகுதிகள்

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  • பர்கூர்
  • கிருஷ்ணகிரி
  • வேப்பனஹள்ளி
  • ஓசூர்
  • தளி
  • ஊத்தங்கரை (தனி)

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

16 ஆவது

(2014)

6,91,163 6,61,297 113 13,52,573
17 ஆவது

(2019)

7,72,614 7,53,498 236 15,26,348
18 ஆவது

(2024)

8,07,389 8,02,219 305 16,09,913

மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்

ஆண்டு

கட்சி

வென்ற வேட்பாளர்

1951 இந்திய தேசிய காங்கிரசு சி. ஆர். நரசிம்மன்
1957 இந்திய தேசிய காங்கிரசு சி. ஆர். நரசிம்மன்
1962 திமுக க. இராசாராம்
1967 திமுக கமலநாதன்
1971 இந்திய தேசிய காங்கிரசு தீர்த்தகிரி கவுண்டர்
1977 அதிமுக பி.வி.பெரியசாமி
1980 இந்திய தேசிய காங்கிரசு வாழப்பாடி ராமமூர்த்தி
1984 இந்திய தேசிய காங்கிரசு வாழப்பாடி ராமமூர்த்தி
1989 இந்திய தேசிய காங்கிரசு வாழப்பாடி ராமமூர்த்தி
1991 இந்திய தேசிய காங்கிரசு கே.வி.தங்கபாலு
1996 தமிழ் மாநில காங்கிரசு சி.நரசிம்மன்
1998 அதிமுக கே.பி. முனுசாமி
1999 திமுக வெற்றிச்செல்வன்
2004 திமுக இ. கோ. சுகவனம்
2009 திமுக இ. கோ. சுகவனம்
2014 அதிமுக கே. அசோக் குமார்
2019 இந்திய தேசிய காங்கிரசு ஏ. செல்லக்குமார்

14 ஆவது மக்களவைத் தேர்தல் (2004)

தி.மு.க வேட்பாளர் இ. கோ. சுகவனம் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

திமுக இ. கோ. சுகவனம் 4,03,297
அதிமுக நஞ்சே கெளடா 2,84,075

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

தி.மு.க வேட்பாளர் இ. கோ. சுகவனம் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

திமுக இ. கோ. சுகவனம் 3,35,977
அதிமுக கே. நஞ்சேகவுடு 2,59,379
தேமுதிக அன்பரசன் 97,546

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

அ.தி.மு.க வேட்பாளர் கே. அசோக் குமார் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

அதிமுக கே. அசோக் குமார் 4,80,491
திமுக பி. சின்னபில்லப்பா 2,73,900
பாட்டாளி மக்கள் கட்சி கோ. க. மணி 2,24,963

17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் ஏ. செல்லகுமார் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

இந்திய தேசிய காங்கிரசு ஏ. செல்லகுமார் 6,11,298
அதிமுக கே. பி. முனுசாமி 4,54,533
நாம் தமிழர் கட்சி மதுசூதனன் 28,000

இதையும் படிக்கலாம் : தர்மபுரி மக்களவைத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *