தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் விழுப்புரம் மக்களவைத் தொகுதி 13வது தொகுதி ஆகும். இந்த தொகுதி பெருமளவு விவசாயப் பகுதிகளை கொண்டது. இப்பகுதியில் நெல், கரும்பு சாகுபடி அதிகம் நடைபெறும். தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதிகள் இவை. கரும்பு விவசாயம் நடைபெறுவதால், அதிகமான கரும்பு ஆலைகள் உள்ளன.
திண்டிவனம் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பின் போது நீக்கப்பட்டது. அதற்குப் பதில் அதில் இருந்த பல தொகுதிகளை எடுத்தும், சில தொகுதிகளை சேர்த்தும் விழுப்புரம் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.
சட்டமன்ற தொகுதிகள்
விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
- திண்டிவனம் (தனி)
- வானூர் (தனி)
- விழுப்புரம்
- விக்கிரவாண்டி
- திருக்கோயிலூர்
- உளுந்தூர்பேட்டை
வாக்காளர்களின் எண்ணிக்கை
தேர்தல் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
17 ஆவது (2019) |
7,20,770 | 7,22,481 | 185 | 14,43,436 |
18 ஆவது
(2024) |
8,24,569 | 8,44,795 | 213 | 16,69,577 |
மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்
ஆண்டு |
கட்சி |
வென்ற வேட்பாளர் |
2009 | அதிமுக | மு. ஆனந்தன் |
2014 | அதிமுக | எஸ். ராஜேந்திரன் |
2019 | திமுக | ரவிக்குமார் |
2024 | விசிக | து. இரவிக்குமார் |
15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
அ.தி.மு.க வேட்பாளர் மு. ஆனந்தன் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
அதிமுக | மு. ஆனந்தன் | 3,06,826 |
விடுதலை சிறுத்தைகள் கட்சி | சுவாமிதுரை | 3,04,029 |
தேமுதிக | பி. எம். கணபதி | 1,27,476 |
16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
அ.தி.மு.க வேட்பாளர் எஸ். ராஜேந்திரன் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
அதிமுக | எஸ். ராஜேந்திரன் | 4,82,704 |
திமுக | டாக்டர்.கோ.முத்தையன் | 2,89,337 |
தேமுதிக | கே. உமா சங்கர் | 2,09,663 |
17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
தி.மு.க வேட்பாளர் ரவிக்குமார் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
திமுக | ரவிக்குமார் | 5,59,585 |
பாட்டாளி மக்கள் கட்சி | வடிவேல் இராவணன் | 4,31,517 |
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் | கணபதி | 58,019 |
18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
வி.சி.க வேட்பாளர் து. இரவிக்குமார் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
விசிக | து. இரவிக்குமார் | 4,77,033 |
அதிமுக | செ. பாக்யராசு | 4,06,330 |
பாமக | முரளி சங்கர் | 1,81,882 |
இதையும் படிக்கலாம் : கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி