கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி 14வது தொகுதி ஆகும். கள்ளக்குறிச்சி வேகமாக வளர்ந்து வரும் பகுதி என்பதால் கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாகவே தமிழக அரசு அறிவித்துள்ளது. தொகுதி மறுசீரமைப்புக்கு உருவான புதிய தொகுதி கள்ளக்குறிச்சி.

விவசாயம், குச்சி வள்ளிக் கிழங்கில் மாவு தயாரித்து அதன் மூலம் ஜவ்வரிசி உற்பத்தி செய்யும் சேகோ தொழிற்சாலைகள், சுற்றுலாத் தலமான ஏற்காடு, பழங்குடியினர் வாழும் கல்வராயன் மலை என கலவையான சமூக, பொருளாதார, நிலவியல் முகம் கொண்டது கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி.

சட்டமன்ற தொகுதிகள்

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  • இரிஷிவந்தியம்
  • சங்கராபுரம்
  • கள்ளக்குறிச்சி (தனி)
  • கங்கவள்ளி (தனி)
  • ஆத்தூர் (தனி)
  • ஏற்காடு (தனி)

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

16 ஆவது

(2014)

6,96,921 6,93,123 131 13,90,175
17 ஆவது

(2019)

7,57,882 7,70,478 179 15,28,539

மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்

ஆண்டு

கட்சி

வென்ற வேட்பாளர்

2009 திமுக ஆதி சங்கர்
2014 அதிமுக க. காமராஜ்
2019 திமுக கவுதம சிகாமணி
2024 திமுக மலையரசன்

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

தி.மு.க வேட்பாளர் ஆதி சங்கர் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

திமுக ஆதி சங்கர் 3,63,601
பாட்டாளி மக்கள் கட்சி கே. தனராசு 2,54,993
தேமுதிக கே. எல். சுதீஸ் 1,32,223

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

அ.தி.மு.க வேட்பாளர் க.காமராஜ் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

அதிமுக க.காமராஜ் 5,33,383
திமுக இரா.மணிமாறன் 3,09,876
தேமுதிக வி.பி. ஈஸ்வரன் 1,64,183

17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

தி.மு.க வேட்பாளர் கவுதம சிகாமணி வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

திமுக கவுதம சிகாமணி 7,21,713
தேமுதிக சுதீஷ் 3,21,794
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கோமுகி மணியன் 50,179

18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)

தி.மு.க வேட்பாளர் மலையரசன் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

திமுக மலையரசன் 5,61,589
அதிமுக இரா. குமரகுரு 5,07,805
நாம் தமிழர் கட்சி ஜெகதீசன் 73,652

இதையும் படிக்கலாம் : சேலம் மக்களவைத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *