நாச்சியார் திருமொழி என்னும் நூல் வைணவ ஆழ்வார்களுள் ஒருவரான ஆண்டாளால் பாடப்பட்டது. இந்நூல் 504 முதல் 646 பாடல்களைக் கொண்ட வைஷ்ணவ நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் ஒரு பகுதியாகும். 143 பாடல்களைக் கொண்ட இந்நூல், கண்ணனைத் தனது நாயகனாகக் கொண்டு அவனை அடையத் துடிக்கும் ஆண்டாளின் தவிப்பை எடுத்துக் காட்டுகின்றது. எல்லாப் பாடல்களிலும் காதல் வியாபித்திருப்பதைக் காணலாம்.
தனியன்
அல்லிநாள் தாமரை மேல் ஆரணங்கின் இன்துணைவி
மல்லி நாடாண்ட மடமயில் – மெல்லியலாள்
ஆயர்குல வேந்தன் ஆகத்தாள் தென் புதுவை
வேயர் பயந்த விளக்கு
கோலச் சுரிசங்கை மாயஞ்செவ் வாயின் குணம்வினவும்
சீலத் தனள்,தென் திருமல்லி நாடி, செழுங்குழல்மேல்
மாலத் தொடைதென் னரங்கருக் கீயும் மதிப்புடைய
சோலைக் கிளி,அவள் தூயநற் பாதம் துணைநமக்கே.
1. தையொரு திங்கள்
2. நாமமாயிரம்
3. கோழியழைப்பதன்
4. தெள்ளியார் பலர்
5. மன்னு பெரும்புகழ்
6. வாரணமாயிரம்
7. கருப்பூரம் நாறுமோ
8. விண்ணீல மேலாப்பு
9. சிந்துரச் செம்பொடி
10. கார்க்கோடல் பூக்காள்
11. தாமுகக்கும்
12. மற்றிருந்தீர்கட்கு
13. கண்ணனென்னும்
14. பட்டி மேய்ந்து