வீட்டில் செல்வம் குறைவதின் அறிகுறிகள் என்னவென்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். இதனை படித்த பிறகு அந்த தவறை மீண்டும் செய்ய வேண்டாம்.
வீட்டில் செல்வம் குறைவதன் அறிகுறிகள்
- கழுவபடாத எச்சில் மற்றும் சமையல் பாத்திரங்கள் அதிக நேரம் அப்படியே இருப்பது.
- வீட்டில் பெண்கள் விளக்கேற்றாமல் ஆண்கள் விளக்கேற்றுவது.
- தலைமுடி தரையில் உலாவருவது.
- ஒற்றடைகள் சேருவது.
- சூரிய மறைவுக்கு பின் வீட்டை பெறுக்குவது துடைப்பது தூங்குவது.
- எச்சில் பொருள்கள் பாத்திரங்கள் காபி கப்புக்கள் ஆங்காங்கே இருப்பது.
- பெண்கள் தினமும் தலைக்கு குளிப்பவர்களை தவிர மற்றவர்கள் செவ்வாய் வெள்ளி தவிர மற்ற நாளில் தலை குளிப்பது.
- ஆண்கள் புதன் சனி தவிர மற்ற நாளில் தலை குளிப்பது.
- குழாய்களில் தண்ணிர் சொட்டுவது. சுவற்றில் ஈரம் தங்குவது.
- செல் (கரையான்) சேருவது.
- பூராண் போன்ற விஷ ஜந்துகள் உலாவுவது.
- அதிக நேரம் ஈர துணிகள் போட்டு வைப்பது. தேவைக்கு அதிகமான பொருட்கள் வைத்து இருப்பது. வீணடிப்பது.
- உணவு பொருள்கள் வீண்ணடிப்பது.
- உப்பு பால் சர்க்கரை அரிசி போன்றவற்றை சுத்தமாக தீரும் வரை வாங்காமல் இருப்பது, மீண்டும் வாங்காமல் அதன் பாத்திரங்களை கழுவி வைப்பது.
- குறைந்த பட்ச வெளிச்சம் இல்லாமல் மின்சாரம் சேமிப்பதாக வெளிச்சங்களை குறைப்பது.
- மெல்லிசை கேட்காமல் சதா காலம் ராஜச இசையை, அபச இசைகளை கேட்பது.
- இல்லை இல்லை வராது வராது வேண்டாம் வேண்டாம் போன்ற வார்த்தைகளை அதிம் உச்சரிப்பது.
- படுக்கையையும் பூஜை பொருட்களையும் வேலையாட்களை கொண்டு சுத்தம் செய்வது.வாசலில் செருப்பு துடப்பம் போன்றவற்றால் அலங்கோலப்படுத்தி வைத்து இருப்பது.
இதையும் படிக்கலாம் : செல்வம் பெருக பெண்கள் வீட்டில் செய்ய வேண்டியவை..!