செல்வம் பெருக பெண்கள் வீட்டில் செய்ய வேண்டியவை..!

invite lakshmi at home

நமது அன்றாட பழக்க வழக்கங்களைப் பொறுத்தே நமது இல்லங்களில் ஶ்ரீதேவி லட்சுமி தேவி குடிகொள்வதும், மூதேவி குடிகொள்வதும் அமைகிறது. நமது வீட்டில் ஶ்ரீதேவி மட்டும் குடிகொள்ள நாம் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதைப் பார்க்கலாம்.

செல்வம் பெருக வீட்டில் என்ன செய்யலாம்

தினசரி எழுந்ததும் முதலில் நமது உள்ளங்கைகள் அல்லது குழந்தையின் முகம் அல்லது சாமி படங்களை பார்க்கலாம்.

வீட்டில் நாள்தோறும் குறைந்தபட்சம் ஒருமுறையாவது சாமி கும்பிட வேண்டும்.

வாரத்திற்கு இரு முறையாவது வீட்டைக் கழுவி, அப்படியே பூஜை அறையையும் கழுவி, சுத்தம் செய்ய வேண்டும்.

பூஜை அறையில் சாமி படங்களுக்கு தினந்தோறும் பூக்களை படைக்க வேண்டும். தினந்தோறும் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நன்மையைத் தரும்.

பூஜை அறையில் ஏற்றப்படும் தீபங்களை நாமாக அணைக்கக்கூடாது. அது தானாக முழுவதும் எரிந்து அணைதல் நல்லது.

பூஜை அறையிலோ, வீட்டின் முற்றத்திலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைப்பது நல்லது.

பூஜை முடிந்ததும் பெண்கள் நெற்றியிலும், மாங்கல்யத்திலும் குங்குமம் கட்டாயம் வைத்துக்கொள்ள வேண்டும்.

சாமிக்கு இலையில் வைத்துத்தான் உணவு மற்றும் பழங்களை நிவேதனம் செய்ய வேண்டும்.

வீட்டின் கதவு மற்றும் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால், தீய சக்திகள் வீட்டிற்குள் வராது என்பது ஐதீகம்.

வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில் வற்றாத செல்வம் வந்து சேரும். அந்தச் சங்கை நாள்தோறும் பயன்படுத்த வேண்டும்.

வீட்டில் துளசி மற்றும் வேப்ப மரம் வளர்ப்பது நல்லது. தினந்தோறும் அதன் அருகிலாவது நாம் சென்று வருவது சிறப்பு.

செல்வம் பெருக பெண்கள் வீட்டில் செய்ய வேண்டியவை என்ன செய்யக்கூடாது என்பதைப் பார்த்தோம். இதனால் நமது வீட்டில் ஶ்ரீதேவி மட்டும் குடிகொள்வாள்.

மாலை நேரத்தில் வீட்டில் விளக்கு ஏற்றி ஆண்டவனை வணங்குவது சிறந்தது. குத்துவிளக்கு ஏற்றும்போது ஒரு திரி மட்டும் போடக்கூடாது. இரு திரி இட்டு ஒரு முகம் ஏற்ற வேண்டும்.

செல்வம் பெருக வீட்டில் என்ன செய்யக்கூடாது

மாலை சூரியன் மறைந்த பின் , தலை முடியை வாருவதால் உதிரும் முடிகள் தீய சக்திகளை ஈர்ப்பவை. முடிகள் வசியம், மற்றும் சூனியம் வைக்க உபயோகப்படுத்துவது இதனால்தான். ஆகவே வீட்டிற்குள் முடியை மாலை வேளையில் சீவக் கூடாது.

விளக்கேற்றியபின் வீடு பெருக்கக் கூடாது. இதனால் லஷ்மியின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமாம். வீடு பெருக்கும்போது செல்வத்தையும் சேர்த்து பெருக்குவது போலாகும். மாலையில் துளசிக்கு நீர் ஊற்றக் கூடாது. துரதிர்ஷ்டம் உண்டாகுமாம்.

மாலையில் தூங்கினால் லக்ஷ்மி தேவிக்கு பிடிக்காது என்பதால் அந்த வீட்டிற்கு மீண்டும் வர மாட்டாள் என்று கூறுகின்றனர். ஆகவே விளக்கேற்றிய பின் தூங்காதீர்கள். அப்புறம் அந்த வீட்டை லட்சுமி எட்டி கூட பார்க்க மாட்டாள்.

செவ்வாய் கிழமையில் நகம் வெட்டினால் பணம் கிடைக்கும் என்பதும் ஐதீகம். மாலையில் நகம் வெட்டுதல் வீட்டில் நேர்மறை சக்தியை குறைக்கும் சக்தி உண்டு. இது செல்வத்தை குறைக்க வழி செய்யும்.

மாலை வேளையில் அரசமரத்தை வலம் வரக்கூடாது. கோயிலுக்குக் கொண்டு செல்லும் எண்ணெயை கோயில் விளக்கிலே தான் ஊற்ற வேண்டுமே தவிர வேறு ஒருவர் ஏற்றி வைத்த விளக்கில் ஊற்றக்கூடாது.

செல்வம் பெருக வழிமுறைகள்

பச்சை கற்பூரம், சோம்பு, ஏலக்காய் இவை மூன்றையும் ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வர பணம் கைக்கு வரும்.

இலவங்கப்பட்டை குச்சியில் பத்து ரூபாய் தாளை குத்தி நம் பண பெட்டியில் வைத்து வர பண வரவு அதிகரிக்கும். இலவங்கப்பட்டையும் பண வரவை ஈர்க்கும் ஒன்றாகும்.

புதினா இலைகளை பர்ஸில் வைத்து வர பண வளர்ச்சி நிச்சயம். ஒவ்வொரு முறை பணத்தை வெளியே எடுக்கும் போதும் இலையை பார்த்து வர வேண்டும். மேலும் 3 நாட்களுக்கொரு முறை மாற்றி விட வேண்டும்.

வெந்தயம் சிறிது கிண்ணத்தில் போட்டு திறந்த நிலையில் வீடு அடுப்பங்கரையில் வைத்து வர என்றும் உணவு பொருட்களுக்கு குறைவிருக்காது. வாரம் ஒரு முறை பழையதை ஓடும் நீரில் போட்டு விட்டு புதிய தாய் மாற்றி விட நல்லதே நடக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *