ஆடுக நடனம் ஆடுகவே
அரஹர சிவனே ஆடுகவே
ஆடுக நடனம் ஆடுகவே
அரஹர சிவனே ஆடுகவே
சிவகை லாசா பரமேசா
திரிபுரம் எறித்த நடராசா
பவபயம் போக்கும் பரமேசா
பனிமலை ஆளும் சர்வேசா (ஆடுக)
அறுகொடு தும்பை மலராட
அணிமணி மாலைகள் தானாட
பெருகிடும் கங்கை தலையாட
பிறைமதி யதுவும் உடனாட (ஆடுக)
சூலம் உடுக்கை சுழன்றாட
சூழும் கணங்கள் உடனாட
ஆலம் குடித்தோன் ஆடுகவே
அடியார் மகிழ ஆடுகவே (ஆடுக)
ஆலவா யரசே சொக்கேசா
அவனியைக் காக்கும் பரமேசா
ஆலங்காட்டில் ஆடிடுவாய்
அரஹர சிவனே ஆடுகவே (ஆடுக)
திருக்கட வூரின் கடயீசா
தில்லையம் பதியில் நடராஜா
திருமுல்லை மாசில்லா மணியீசா
திருநடம் ஆடுக ஆடுகவே (ஆடுக)
மயிலைக் கபாலி ஈஸ்வரனே
மதுரையில் ஆடிய ஆட்டமென்ன
கயிலையில் ஆடிய ஆட்டமென்ன
கால்மாறி ஆடுக ஆடுகவே
ஆடுக நடனம் ஆடுகவே
அரஹர சிவனே ஆடுகவே
ஆடுக நடனம் ஆடுகவே
அரஹர சிவனே ஆடுகவே
இதையும் படிக்கலாம் : சிவ மந்திரம் சொன்னால் கிடைக்கும் புண்ணியங்கள்..!