கங்கை அணிந்தவா!
கண்டோர் தொழும் விலாசா!
சதங்கை ஆடும் பாத விநோதா!
லிங்கேஸ்வரா! நின் தாள் துணை நீ தா!
தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா
தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா
அல்லல் தீர்த்தாண்டவா வா வா
அமிழ்தானவா வா
அல்லல் தீர்த்தாண்டவா வா வா
அமிழ்தானவா வா
தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா
எங்கும் இன்பம் விளங்கவே
எங்கும் இன்பம் விளங்கவே
அருள் உமாபதே
எளிமை அகல வரம் தா வா வா
வளம் பொங்க வா
எளிமை அகல வரம் தா வா வா
வளம் பொங்க வா
தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா
பலவித நாடும் கலையேடும்
பணிவுடன் உனையே துதிபாடும்
பலவித நாடும் கலையேடும்
பணிவுடன் உனையே துதிபாடும்
கலையலங்கார பாண்டிய ராணி நேசா
கலையலங்கார பாண்டிய ராணி நேசா
மலை வாசா! மங்கா மதியானவா
தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா
இதையும் படிக்கலாம் : சிவ பஜனை பாடல்கள்