செவ்வாய்கிழமை முருகப்பெருமானுக்கு உகந்த நாள் என்பதால் இந்த நாளில் இந்த மந்திரத்தை ஜபிப்பது சிறப்பு. செவ்வாய்க்கிழமை காலை எழுந்து குளித்துவிட்டு மனதையும் உடலையும் சுத்தமாக வைத்துக் கொண்டு முருகப்பெருமானின் முன் அமர்ந்து தீபம் ஏற்றி பூவை போட்ட பின் ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை இறைவனுக்கு படைத்து விட்டு இந்த மந்திரத்தைச் சொல்ல ஆரம்பிக்கலாம்.
மந்திரம் சொல்ல தொடங்கும் போது எதிரி உங்களுக்குத் தெரியலாம் அல்லது உங்களுக்குத் தெரியாதவராக இருக்கலாம், ஆனால் நான் இந்த சிரமத்தால் பாதிக்கப்பட்டேன், இந்த சிக்கலில் இருந்து என்னைக் காப்பது முருகா என்று சொல்ல வேண்டும். இந்த முருகப் பெருமான், துன்பம் செய்பவர்களை உன்னிடம் சரணடையச் செய்யும் மாபெரும் கடவுள்.
பகை கடிதல் மந்திரம்
திருவளர் சுடருருவே சிவைகரம் அமருருவே
அருமறை புகழுருவே அறவர்கள் தொழுமுருவே
இருள்தபும் ஒளியுருவே எனநினை எனதெதிரே
குருகுகன் முதன்மயிலே கொணர்தியுன் இறைவனையே (1)
மறைபுகழ் இறைமுனரே மறைமுதல் பகருருவே
பொறைமலி யுலகுருவே புனநடை தருமுருவே
இறையிள முக உருவே எனநினை எனதெதிரே
குறைவறு திருமயிலே கொணர்தியுன் இறைவனையே (2)
இதரர்கள் பலர்பொரவே இவணுறை எனதெதிரே
மதிரவி பல வென தேர் வளர் சரணிடை எனமா
சதுரொடு வருமயிலே தடவரை யசைவுறவே
குதிதரு மொரு மயிலே கொணர்தியுன் இறைவனையே (3)
பவநடை மனுடர்முனே படருறும் எனதெதிரே
நவமணி நுதல் அணியேர் நகைபல மிடர் அணிமால்
சிவணிய திருமயிலே திடனொடு நொடிவலமே
குவலயம் வருமயிலே கொணர்தியுன் இறைவனையே (4)
அழகுறு மலர் முகனே அமரர்கள்பணி குகனே
மழவுறு உடையவனே மதிநநி பெரியவனே
இழவிலர் இறையவனே எனநினை எனதெதிரே
குழகதுமிளிர் மயிலே கொணர்தியுன் இறைவனையே (5)
இணையறும் அறுமுகனே இதசசி மருமகனே
இணரணி புரள்புயனே எனநினை எனதெதிரே
கணபண வரவுரமே கலைவுற எழுதருமோர்
குணமுறு மணிமயிலே கொணர்தியுன் இறைவனையே (6)
எளிய என் இறைவ குகா எனநினை எனதெதிரே
வெளிநிகழ் திரள்களைமீன் மிளிர்சினையென மிடைவான்
பளபள எனமினுமா பலசிறை விரிதருநீள்
குளிர்மணி விழிமயிலே கொணர்தியுன் இறைவனையே (7)
இலகயில் மயில்முருகா எனநினை எனதெதிரே
பலபல களமணியே பலபல பதமணியே
கலகல கல எனமா கவினொடுவருமயிலே
குலவிடுசிகைமயிலே கொணர்தியுன் இறைவனையே (8)
இகலறு சிவகுமரா எனநினை எனதெதிரே
சுகமுனிவரர் எழிலார் சுரர்பலர் புகழ் செயவே
தொகுதொகு தொகு எனவே சுரநட மிடுமயிலே
குகபதி அமர் மயிலே கொணர்தியுன் இறைவனையே (9)
கருணைபெய் கனமுகிலே கடமுனி பணிமுதலே
அருண் அயன் அரன் எனவே அகநினை எனதெதிரே
மருமலர் அணிபலவே மருவிடு களமயிலே
குருபல வவிர்மயிலே கொணர்தியுன் இறைவனையே (10)
இதையும் படிக்கலாம் : வேல் மாறல் படித்தால் பிரச்சனை தீரும்..!