தமிழ்க் கடவுளான முருகப்பெருமானுக்கு முகங்களும் 6. முருகனின் படை வீடுகளும் 6. முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களும் 6 பேர், சரவணபவ என்ற முருகப்பெருமானின் திருமந்திரமும் 6 எழுத்து. ஜாதகத்தின் ஆறாம் இடம் பொதுவாக விரோதம், கடன், ரோகம், சத்ரு போன்றவற்றை குறிக்கும். இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டவரும் முருகன்.
முருகப் பெருமானுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் 6 கோயில்கள், ஒவ்வொன்றும் அவருடைய படைவீடு எனப்படுகின்றது.
முருகன் என்றாலே நம் நினைவிற்கு வருவது அழகும், அறிவும் சேர்ந்தது தான். முருகப்பெருமானின் ஒவ்வொரு படைவீடுகளும் தனி தனி பெருமைகளை கொண்டிருக்கிறது. முருகனின் திருவிளையாடலும், முருகன் தோற்றமும் மக்கள் அவர்களுடைய வாழ்க்கைக்கு ஏற்ற தத்துவங்களை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
Contents
அறுபடை வீடுகள்
படை வீடுகள் | இடம் | மாவட்டம் |
முதல் படைவீடு | திருப்பரங்குன்றம் | மதுரை |
இரண்டாம் படைவீடு | திருச்செந்தூர் | தூத்துக்குடி |
மூன்றாம் படைவீடு | திருவாவினன்குடி (பழநி) | திண்டுக்கல் |
நான்காம் படைவீடு | திருவேரகம் (சுவாமிமலை) | தஞ்சாவூர் |
ஐந்தாம் படைவீடு | திருத்தணி | திருவள்ளூர் |
ஆறாம் படைவீடு | பழமுதிர்சோலை (அழகர்மலை) | மதுரை |