ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் தான் அம்மன் தோன்றினாள். எனவே அம்மன் கோவில்களில் ஆடிப்பூரம் அன்று வளைகாப்பு விழா கொண்டாடப்படுகிறது.
ஆடிப்பூரம் 2024 எப்போது?
ஆடிப்பூரம் என்பது அம்மனுக்கு நடத்தப்படும் வளைகாப்பு திருவிழாவாகும். தமிழ் மாதங்களில் 4வது மாதமாக வரும் ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திர நாள் அன்று அம்பாள் அவதரித்தார் என்று புராணங்கள் கூறுகின்றது. இந்த ஆண்டு ஆடிப்பூரம் 2024 ஆகஸ்ட் 7 புதன்கிழமை அன்று வருகிறது.
ஆடிப்பூரம் வளைகாப்பு
ஆடிப்பூரத்தன்று உலக மக்களைக் காக்கும் சக்தியாக அம்பாள் விளங்குகிறார் என்பது ஐதீகம். ஆடிப்பூரத்தன்று சிவன் கோவிலில் அன்னையர்களுக்கு வளைகாப்பு விழா நடைபெறுகிறது. தாய்மை என்பது பெண்களின் தனிச் சிறப்பு. எனவே, உலக உயிர்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் அன்னைக்கு இந்த நாளில் வளைகாப்பு நடத்தப்படுகிறது. உலகத்தை படைத்து, காத்து, ரட்சித்து அருளும் அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக் காப்பு, குங்குமக் காப்பு நடத்துவார்கள். ஆனால் அன்னைக்கு வளைகாப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம்.
தாய்மை பேறுக்காக தவமிருக்கும் பெண்கள் அன்னைக்கு வளைகாப்பு நடத்துவதற்காக வளையல்களை வாங்கிக் கொடுத்து தங்களுக்கும் விரைவில் வளைகாப்பு நடைபெற வேண்டும் என்று வேண்டிக்கொள்வார்கள். அம்மன் கோவில்களில் பிரசாதமாக கொடுக்கும் வளையல்களை பெண்கள் அணிந்து கொண்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும். மனம் போல் மாங்கல்யம் அமையும் என்பதும் நம்பிக்கை.
குழந்தை பாக்கியம் தரும் ஆடிப்பூர விரதம்
பூரம் நட்சத்திரம் சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரம். சுக்கிரனின் தெய்வம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர். அதனால் தான் ஆடிப்பூரத்தில் பிறந்த ஆண்டாள் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை நேசித்து அவரையே மணந்தாள். சுக்கிரனின் அனுக்கிரகம் இருந்தால் கணவன்-மனைவி இடையே ஒற்றுமை நிலவும், தாம்பத்ய ஒற்றுமைக்கும் காரணம் சுக்கிரனே. எனவே தான் பூரம் நட்சத்திரத்தில் விரதம் இருந்தால் திருமண வரம் கிடைக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கின்றனர்.
ஆடிப்பூர விரதம் திருமண யோகம் தரும்
ஆடிப்பூரம் அன்று திருமணமாகாத பெண்கள் விரதம் இருந்து ஆண்டாளை வணங்கினால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். ஆடிப்பூரம் அன்று லலிதா சகஸ்ரநாமம் சொல்லி வழிபடுவது வழக்கம்.
ஆடிப்பூரம் வளைகாப்பு விழா உருவான புராண கதை
பொதுவாக, பெண்கள் கலர் கலராக கைநிறைய வளையல் அணிந்து அழகு பார்க்க விரும்புகிறார்கள். அம்மனுக்கும் அப்படி ஒரு ஆசை இருக்கும் இல்லையா? அவளும் ஒரு பெண். சக்திதேவி தன் ஆசையை எப்படி நிறைவேற்றினார் தெரியுமா? அந்த புராணக் கதையைப் பார்ப்போம்.
ஆடிப்பூரம் வளைகாப்பு திருவிழா புராண கதை பொதுவாகவே பெண்களுக்கு கைநிறைய கலர் கலராக வளையல் அணிந்து அழகு பார்க்க ஆசைப்படுவார்கள். அம்மனுக்கும் அந்த ஆசை இருக்காதா?. அவளும் பெண்தானே. சக்திதேவி தன் ஆசையை எப்படி நிறைவேற்றிக்கொண்டாள் தெரியுமா? அதற்கான புராண கதையைப் பார்க்கலாம்.
ஒரு முறை ஆந்திராவைச் சேர்ந்த வளையல் வியாபாரி ஒருவர் வளையல் விற்க சென்னை வந்தார். ஒரு நாள், ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கொண்டு வந்த வளையல்களில் பாதியை விற்றுவிட்டு, மீதியை மறுநாள் விற்கலாம் என்று நினைத்தார். பெரியபாளையத்தை அடைந்ததும் மிகவும் சோர்வாக உணர்ந்தார். நடக்க முடியாத அளவுக்கு சோர்வாக இருந்தார்.
இதனால் வளையல் விற்பனையாளர் வளையலை வேப்ப மரத்தடியில் வைத்துவிட்டு அங்கேயே உறங்கிவிட்டார். சில மணி நேரம் நன்றாக தூங்கி எழுந்து பார்த்த போது, தான் வைத்திருந்த வளையல் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். எல்லா இடங்களிலும் தேடினான். கிடைக்கவில்லை. இதனால் கவலையடைந்த அவர், தனது சொந்த மாநிலமான ஆந்திராவுக்குச் சென்றார்.
அன்றிரவு, அந்த வளையல் வியபாரியின் கனவில் அம்மன் தோன்றினாள். “நான் ரேணுகை பவானி. நீ கொண்டு வந்த வளையல்கள் என் கைகளை அலங்கரித்து இருக்கிறது பார். என் மனதை மகிழ்வித்த உனக்கு வரங்கள் அளிக்கிறேன். பல யுகங்களாக பெரியபாளையம் வேப்பமரத்தின் அடியில் புற்றில் சுயம்புவாக வீற்றிருக்கும் என்னை வணங்குபவர்களின் வாழ்க்கை செழிக்கும் என்று கூறி மறைந்தார் அம்பாள்.
அன்று இரவு வளையல் வியாபாரியின் கனவில் அம்மன் தோன்றினாள். நான் ரேணுகை பவானி, நீ கொண்டு வந்த வளையல்கள் என் கைகளை அலங்கரித்து இருக்கிறது பார். பல வருடங்களாக பெரியபாளையத்தில் உள்ள வேப்ப மரத்தடியில் புற்றில் சுயம்புவாக அமர்ந்திருக்கும் என்னை வணங்குபவர்களின் வாழ்க்கை செழிக்கும் என்று அம்மன் சொல்லிவிட்டு மறைந்து விடுகிறாள்.
வணிகர் தனது கனவைப் பற்றி தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கூறினார். அவர்களையும் சென்னைக்கு அழைத்துச் சென்று தான் கண்ட கனவுகளை பெரியபாளையம் மக்களிடம் எடுத்துரைத்தார். அதன்பின், பெரியபாளையத்தில் சுயம்பு அம்மனுக்கு கோவில் கட்டினார்கள்.
அதேபோல் ஆண்டாள் தோன்றிய நாள் ஆடிப்பூரம். இந்த நன்னாளில் ஆண்டாளைத் தரிசித்து, பூமாலைகள் மற்றும் வளையல்களைச் சமர்ப்பித்து வணங்கி, ஆண்டாள் ஆசியை பெற்ற இரண்டு வளையல்களை அணிந்து கொள்ளலாம். அதேபோல, ஆண்கள் ஆண்டாளுக்கு அணிவித்த சில பூக்களை வாங்கி சட்டைப் பையில் வைத்தாலும், நல்ல முயற்சி வெற்றியடையும். எல்லா அதிர்ஷ்டமும் உண்டாகும்.
ஆடிப்பூரம் விழாவையொட்டி, அனைத்து அம்மன் கோயில்களிலும் வளையல் காப்பு அணிவிக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அன்றைய தினம் அம்மனுக்கு வளையல்களை வாங்கி தந்து வழிபட்டு அவளது பிரசாதமாக சில வளையல்களைப் பெண்கள் பெற்று அணிந்து கொண்டால், மனம் போல மாங்கல்யம் அமையவும் அதுமட்டுமின்றி, அம்பிகை தாய்மைக்கோலம் கொண்ட நாள் என்பதால் குழைந்தை பாக்கியமும் நிச்சயம் கிட்டும்.
இதையும் படிக்கலாம் : ஆடி அம்மன் வழிபாட்டின் மகிமை..!