வரதா மணி நீ (பழனி) – திருப்புகழ் 194

வரதா மணிநீ – யெனவோரில்
வருகா தெதுதா – னதில்வாரா

திரதா திகளால் – நவலோக
மிடவே கரியா – மிதிலேது

சரதா மறையோ – தயன்மாலும்
சகலா கமநூ – லறியாத

பரதே வதையாள் – தருசேயே
பழனா புரிவாழ் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : வனிதை உடல் (பழனி) – திருப்புகழ் 195

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *