குளிர்காலத்துல 5 பழங்கள கண்டிப்பா சாப்பிடுங்க..!

பருவகால உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் முக்கிய பங்கு உண்டு. தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ளது. காலை மற்றும் மாலையில் குளிர் முழுவதுமாக இருக்கும். இந்த பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமின்றி நோய்கள் வராமல் தடுக்கும். இதில் குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய 5 பழங்கள் பற்றி பார்க்கலாம்.

ஆரஞ்சு

ஆரஞ்சில் உள்ள இனிப்பு மற்றும் புளிப்பு சுவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆரஞ்சு சாப்பிடுவது புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும். இந்த பழம் சாப்பிடுவதால் பருவகால நோய்கள் வராமல் தடுக்கலாம்.

கொய்யா

குளிர்காலத்தில் எளிதில் கிடைக்கும் ஒரு அற்புதமான பழம் கொய்யா. இதில் வைட்டமின் ஏ, ஃபோலேட், பொட்டாசியம், நார்ச்சத்து என பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. செரிமான பிரச்சனைகளால் அவதிப்பட்டால், கொய்யாவை சாப்பிட வேண்டும்.

ஆப்பிள்

ஆப்பிள் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நன்மை பயக்கும் ஒரு உணவு. எனவே தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டால் மருத்துவரை சந்திக்கும் நேரத்தை தாமதப்படுத்தலாம். குளிர்காலத்தில் ஆப்பிள்கள் ஏராளமாக கிடைக்கும். இந்த பழம் நம் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளை செய்கின்றன. ஆப்பிளில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும். இதில் நார்ச்சத்து, பெக்டின் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைத்து உள்ளன. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ப்ளம்ஸ்

ப்ளம்ஸில் வைட்டமின் ஏ, சி, கே மற்றும் மாங்கனீஸ், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைத்து இருக்கு. இதில் உள்ள பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.

திராட்சை

திராட்சையில் நார்ச்சத்து நிறைத்து உள்ளது. இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதில் உள்ள இயற்கையான பைட்டோ கெமிக்கல்கள் வீக்கத்தைக் குறைக்கும். இது பல அழற்சி பிரச்சனைகளின் அபாயத்திலிருந்து பாதுகாக்கும்.

இதையும் படிக்கலாம் : குழந்தைகளுக்கு சளி கட்டினால் என்ன செய்வது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *