கருடனை யார் வணங்க வேண்டும்?

கருடாழ்வார் பெரிய திருவடி என்றும், ஸ்ரீஅனுமானை சிறிய திருவடி என்றும் அழைப்பர். பெரிய திருவடி கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் சுவாதி நட்சத்திர நாளில் தான் என்று புராணம் கூறுகிறது. இன்று ஆடி சுவாதி கொண்டாடப்படுகிறது.

இந்த நன்னாளில் விரதம் இருந்து, கருடனை தரிசித்து, கருடனை வழிபடுவதால் அனைத்து தோஷங்களும் நீங்கும். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.

கருடனை யார் வணங்க வேண்டும்?

  • திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நக்ஷத்திரங்களில் ராசி அல்லது லக்னம் உள்ளவர்களுக்கு ராகுவின் சாரம் உண்டு, அஸ்வினி, மகம் ஆகிய நட்சத்திரங்களில் கேதுவின் சாரம் உள்ளது.
  • ஜெனன ஜாதகத்தில் ராகு அல்லது கேதுவை திரிகோணங்களான லக்னம், பூர்வ புண்ணியம், பாக்யம், பித்ரு பித்ரு ஸ்தானங்களில் ராகு/ கேது உள்ளவர்கள்.
  • ஆத்மகாரகராக ராகுவை உடையவர்கள்
  • சூரியன் மற்றும் சந்திரனுடன் ராகு/கேது சேர்க்கை பெற்றவர்கள்.
  • கால ஸர்ப தோஷத்தில் பிறந்தவர்கள்
  • பெண் ஜாதகத்தில் கணவனைக் குறிக்கும் செவ்வாயுடன் ராகு சேர்க்கை பெற்றவர்கள்.
  • கோசார ராகு/கேதுவால் மாந்திரீகம், தீராத நோய்கள் போன்ற அபிசார தோஷங்களால் அவதிப்படுபவர்கள்.
  • ஜெனன ஜாதகத்திலோ அல்லது கோசாரத்திலோ புதன் மற்றும் கேது சேர்க்கை பெற்றவர்கள் தைரியமின்மையால் எதிரிகளால் பயப்படுவார்கள்.
  • கருடன் சக்திவாய்ந்த தெய்வீக சக்தியைக் கொண்டுள்ளது மற்றும் 16 வகையான விஷங்களை நீக்கக்கூடியவர். பழங்காலத்தில், முனிவர்கள் விஷ ஜந்துக்களிடமிருந்தும், பிறரைக் கொல்லும் விஷத்திலிருந்தும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள லட்சக்கணக்கான கருட மந்திரங்களை ஜெபித்து அனுஷ்டித்து வந்தனர்.

இதையும் படிக்கலாம் : கஷ்டத்தை போக்கும் கருட மாலா மந்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *