நடிகை த்ரிஷாவின் ஃபிட்னஸ் ரகசியம் தெரியுமா?

40 வயதில் த்ரிஷா ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருப்பதன் பின்னணியில் உள்ள ரகசியங்களைக் பற்றி தெரிந்து கொள்வோம்.

  • த்ரிஷா காலையில் சத்தான பழங்களை சாப்பிடுகிறார். எண்ணெயில் பொரித்த உணவை சாப்பிடமாட்டார்.
  • உடல் நீரேற்றமாக இருக்க நிறைய தண்ணீர்குடிப்பாராம். அவங்களுக்கு ஜூஸ் குடிக்க பிடிக்கும். ஆரோக்கியமான பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் பழச்சாறுகளையும் குடிப்பார். வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு சாறுகளை முக்கியமாக குடிப்பார்.
  • த்ரிஷா ஹோட்டல் உணவுகளை அதிகம் சாப்பிடுவதில்லை என்பதே முக்கிய காரணம். மைதா மற்றும் சர்க்கரை உணவுகளை சாப்பிடுவது இல்லை.
  • பெரும்பாலும், அவர்கள் வீட்டில் சமைத்த உணவை மட்டுமே சாப்பிடுவார். ஆம்லெட், தயிர், முழு தானிய பிரட் போன்றவற்றை விரும்பி சாப்பிடுவார்.
  • திரிஷாவுக்கு பிரியாணி பிடிக்கும். ஒருவேளை எடை அதிகரித்தால், அதைக் குறைக்க கடினமாக உழைப்பாராம்.
  • அவர் தொடர்ந்து யோகா, உடற்பயிற்சி மற்றும் தியானத்தில் பங்கேற்கிறார்.
  • ஸ்நாக்ஸ் என்றால் பாதாம், பிஸ்தா, முந்திரி போன்றவற்றை சாப்பிடுவார். அவர் தனது பையில் எப்போதும் ஒருவித நட்ஸை வைத்திருப்பார்.

இதையும் படிக்கலாம் : உடல் எடையை குறைக்கும் சில பானங்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *