ஆபத்தான அஜினோமோட்டோ..!

ajinomoto side effects

கடந்த சில ஆண்டுகளாக பிரபலமாகி வரும் அஜினோமோட்டோ என்ற உப்பும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். முன்பு சென்னை போன்ற மாநகரங்களில் மட்டும் பிரபலமாக இருந்த மோனோ சோடியம் குளூட்டமேட் என்ற வேதிப்பெயரைக் கொண்ட இந்த விநோத உப்பு, தற்போது கிராமப்புற வீடுகளின் சமையலறைக்குள்ளும் புகுந்துவிட்டது.

இந்த அஜினோமோட்டோவின் விஷத்தன்மை பற்றி இருவேறு கருத்துகள் இருந்தபோதிலும் பல மருத்துவ ஆராய்ச்சிகள் மனிதர்களுக்கு அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு இது பலவித ஆபத்துகளை உருவாக்கும் என்று நிரூபித்துள்ளன.

கருவுற்ற எலிகளுக்கு அஜினோமோட்டோ கலந்த உணவைத் தொடர்ந்து கொடுத்து வந்தால் அவற்றின் குட்டிகளுக்கு மூளைப் பகுதியில் உள்ள செல்கள், அளவில் சுருங்கியிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

அஜினோமோட்டோ கலந்த உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிடும் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் சுரப்பது வெகுவாக குறையும். இதனால் உடல் வளர்ச்சி தடைப்பட்டு உயரம் குறைகிறது. மேலும் இந்த வேதிப் பொருள் மூளையில் ஆர்குவேட் நுக்ளியஸ் என்னும் பகுதியைப் பாதிப்பதால் உடல் எடை தாறுமாறாக அதிகரிக்கும்.

மூளை மட்டுமின்றி இரைப்பை, சிறுகுடல், கல்லீரல் போன்ற உறுப்புகளிலும் அழற்சியையும், சிறு ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது. இதனால் குழந்தைகளுக்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாத வயிற்றுவலி அடிக்கடி ஏற்படும்.

ஒவ்வாமை உள்ள ஒரு சிலருக்கு இந்த வேதிப் பொருள் கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே மார்பில் எரிச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டு, உடல் வியர்க்க ஆரம்பித்துவிடும். இந்த நோய்க் குறிகளுக்கு சைனா உணவக நோய் என்று தனிப் பெயரே சூட்டப் பட்டுள்ளது.

அஜினோ மோட்டேவைப் போன்றே பாஸ்ட் புட் கடைகளிலும், ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் பயன்படுத்தப்படும் ஜீரோ ஏடேட் ஹைட்ரோ ஜெனடேட் என்ற எண்ணெயும், பல்வேறு ஆபத்துக்களை உருவாக்கும் குணம் கொண்டது என்ற தகவல்களையும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஜீரோ ஏடேட் ஹைட்ரோ ஜெனடேட் என்ற எண்ணெய் பசு, எருது, பன்றி போன்ற பல விலங்குகளின் கொழுப்பிலிருந்து தயாரிக்கப் படுவதாகும். இதில் உடலுக்குத் தேவையற்ற ஒருவித கொழுப்பு இருக்கிறது. பாக்கெட்டுகளில் கிடைக்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ், பீட்ஸா, சாக்லெட், துரித உணவுகள் போன்றவை இந்த எண்ணெயில்தான் தயாரிக்கப்படுகின்றன.

இந்த எண்ணெயைப் பலமுறை திரும்பத் திரும்ப பயன்படுத்தினாலும் உணவின் மணம் மாறாது பதினெட்டு மாதம் வரை உணவுப் பொருள் கெட்டுப் போகாது. மெக்டொனால்ட், பீட்ஸா கார்னர்களில் கிடைக்கும் ஸ்னாக்ஸ் பொருட்கள் நாம் வீட்டுத் தயாரிப்பை விட சுவையுடன் இருப்பது போல தோன்றுவதற்கு இந்த எண்ணெய்தான் காரணம்.

ஆனால் இந்த எண்ணெயைப் பயன்படுத்தினால் உடலில் வேண்டாத கொழுப்பு சேர்ந்து இருதய நோய், புற்றுநோய், உடல் பருமன் எல்லாம் வந்துவிடும் என்கிறார்கள்.

திருமணம் போன்ற விருந்து நிகழ்ச்சிகளில் உணவு உண்போர் உடனடியாக வயிற்று உபாதையால் அவதிப்படுகிறார்கள்.

ஆனால் நமது நாட்டில் குழந்தைகளைக் கவரும் வகையில் பல வண்ணப் பாக்கெட்டுகளில் நொறுக்குத் தீனிகளை விற்பவர்கள் அவற்றில் அஜினோமோட்டோ கலந்திருப்பதை மறைத்து மக்களுக்குப் புரியாத சங்கேத மொழியில் எழுதி ஏமாற்றுகிறார்கள்.

சாப்பாட்டில் அதிகம் பிரியமில்லாத நோஞ்சான் குழந்தைகளுக்குப் பல பெற்றோர்கள் இந்த அஜினோமோட்டோ கலந்த நொறுக்குத் தீனி பொட்டலங்களை வாங்கிக் கொடுப்பர். இந்தக் குழந்தைகளும் வீட்டு உணவைவிட இந்தப் பொட்டலத் தீனிகளை அளவுக்கு அதிகமாக விரும்பித் தின்பர்.

குழந்தை இதையாவது சாப்பிடுகிறதே என்று ஆசை ஆசையாக பலரும் அதை வாங்கிக்கொடுப்பர். சில மாதங்கள், வருடங்கள் கழித்து இந்த நோஞ்சான் எக்கச்சக்கமாக சதை போட்டு ஊளைச் சதையுடன் தோன்றுவான் என்பதே உண்மை.

பிறப்புக் கோளாறு, உறுப்புகளில் வளர்ச்சியற்றத் தன்மை, தலைவலி, வாந்தி, வயிற்றுவலி, செரிமானச் சிக்கல், கெட்ட கனவு, தூங்குவதில் சிக்கல், சோம்பல், மிதமாகும் இதயத்துடிப்பு, முடிகொட்டுதல், ஆஸ்துமா, பக்கவாதம், அல்சிமர்ஸ் என்ற முதுமை நோய் மற்றும் சர்க்கரை நோய் என அஜினோமோட்டோ அள்ளி வழங்கும் நோய்களாகும்.

இதையும் படிக்கலாம் : ஃப்ரைடு ரைஸ் அடிக்கடி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *