ஆரோக்கியம் தரும் பொன்னாங்கண்ணிக் கீரை..!

alternanthera sessilis benefits

பொன்னாங்கண்ணி கீரைச்சாறு, கரிசலாங் கண்ணி கீரைச்சாறு வகைக்கு 100 மி.லி. அளவு எடுத்து ஒன்றாய் கலந்து கொள்ளவும். இதில் 50 கிராம் அதிமதுரத்தை பால்விட்டு அரைத்து விழுதாக்கி, மேற்படி சாறுடன் கலந்து கொள்ளவும். பின்னர் இதனை மெழுகுப் பதமாய்க் காய்ச்சி வைத்துக் கொள்ளுங்கள். இதை தினமும் காலை, மாலை இருவேளையும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர வாய்ப்புண், வயிற்றுப்புண் போன்றவை குணமாகும்.

நரம்புத்தளர்ச்சி நீங்க

பொன்னாங்கண்ணிக் கீரை, செம்பருத்திப்பூ, ஆவாரம்பூ, ரோஜாப்பூ, கொன்றைப்பூ ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் எடுத்து ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும்.

இதில் ஐந்து கிராம் அளவு தினசரி உணவுக்குப்பின் இரவில் மட்டும் சாப்பிட்டுவர வேண்டும். இத்துடன் மறக்காமல் ஒரு டம்ளர் பாலும் சாப்பிட்டு வர, இரண்டு மாதங்களில் நரம்புத் தளர்ச்சி பூரணமாய் குணமாகும். மேலும் ஆண்மைக்குறைபாடுகளும் தீரும்.

அபார நினைவாற்றல் பெற

பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, சீந்தில், வல்லாரை ஆகியவற்றை வகைக்கு 100கிராம் எடுத்து ஒன்று கலந்து தூள் செய்து கொள்ளவும்.

இதில் மூன்று கிராம்அளவு, ஒரு டம்ளர் பசும்பாலுடன் சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வர, அபார நினைவாற்றல் உண்டாகும். மேலும் சோர்வு, பட படப்பு, தூக்கமின்மை, ரத்தஅழுத்தம், மன அழுத்தம், மன உளைச்சல் போன்ற கோளாறுகளும் தீரும்.

வெள்ளைப்படுதல் குணமாக

பொன்னாங்கண்ணிச்சாறு, கரிசலாங் கண்ணிச்சாறு, பசு நெய், பசும்பால் எனஒவ்வொன்றிலும் வகைக்கு 60 மி.லி. அளவுக்கு எடுத்து ஒன்றாகக் கலக்கிக்காய்ச்சி, மெழுகு பதத்தில் இறக்கி வைத்துக் கொள்ளவும்.

இதில் தினமும்காலை, மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் (5 கிராம்) அளவுக்குச்சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் ஒரே வாரத்தில் குணமடையும். கை, கால் எரிச்சல், பித்த மயக்கம் போன்ற பாதிப்புகளும் குணமாகும்.

கண் நோய்கள் விலக

பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சிறிது மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள்,பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து சூப் செய்து தொடர்ந்து 48 நாட்கள் (48 நாட்கள்) சாப்பிட்டு வர, கண் தொடர்பான அனைத்து வியாதிகளும் தீரும்.

மேனியழகு உண்டாக

100 கிராம் பொன்னாங்கண்ணி (காய்ந்தது), 100 கிராம் பிஸ்தா பருப்பு இரண்டையும் ஒன்றாக்கி அரைத்துத் தூள் செய்து சலித்து வைத்துக் கொள்ளவும்.இதில் ஒரு ஸ்பூன் அளவு காலையும் மாலையும் சாப்பிட்டு வர, உடலுக்கு அழகும்பொன்னிறமும் ஒருசேர உண்டாகும்.

முகப்பரு தேமல், படர்தாமரை விலக

முந்திரிப் பருப்பு, முள்ளங்கி விதை சம அளவு எடுத்து, பொன்னாங்கண்ணிச் சாறு விட்டரைத்து பரு, தேமல், படர்தாமரை யின்மீது போட்டுவர, ஒரே வாரத்தில் குணமாகும்.

உஷ்ணம் தீர

பொன்னாங்கண்ணிக் கீரையை விழுதாய் அரைத்து தலையில் தேய்த்துக் குளிக்க, உடல் உஷ்ணம், கண்நோய்கள் போன்றவை விலகும்.

இளநரை நீங்க

பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, கொட்டைக் கரந்தை, குப்பைமேனி, சிறுசெருப்படை ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் சேர்த்து தூள் செய்து கொள்ளவும்.இதில் ஒரு ஸ்பூன் அளவு காலை, மாலை சாப்பிட்டு பசும்பால் அருந்தி வர இளநரைமறையும். மேலும் நரை வருவதும் நின்றுவிடும்.

நூறாண்டு வாழ

பொன்னாங்கண்ணியில் தங்கத்தின் சத்து அடங்கியுள்ளது. பொன்னாங்கண்ணியைத்தவறாது நமது உணவில் சேர்த்து வர வேண்டும். பொன்னாங்கண்ணித் தைலம் கடைகளில்வெகு சாதாரணமாய்க் கிடைக்கிறது. அதனை வாங்கி வாரம் ஒரு முறையேனும் தலைமுழுகி வர வேண்டும். பொன்னாங்கண்ணி சித்தர்கள் நமக்கு அருளிய வரம். பொன்னாங்கண்ணியால் இந்த உடலைப் பண்படுத்தி,

இதையும் படிக்கலாம் : மாரடைப்பு வராம தடுக்க ஸ்வீட் கார்ன் சாப்பிடுங்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *