சிவனை வழிபட்ட உயிரினங்களும் திருத்தலங்களும்

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் படி அளப்பவர் ஈசன். சிவபெருமான் அழிவின் கடவுள், அவர் தன்னை வணங்கும் உயிர்களுக்கு நல்லனவும், மகிழ்ச்சியையும் தருகிறார், மீண்டும் பிறவா முக்தியையும் தருவார்.

மனித வழிபாட்டிற்காக பல்வேறு கோவில்கள் இருந்தாலும், மனிதர்கள் உட்பட பல்வேறு உயிரினங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிவன் கோவில்களும் உள்ளன.

சிவனை வழிபட்ட உயிரினங்களும் திருத்தலங்களும்

1. அணில் வழிபட்ட கோயில் – குரங்கணில் முட்டம்

2. ஆமை வழிபட்ட கோயில் – திருக்கச்சூர்

3. ஈ வழிபட்ட கோயில் – திருஈங்கோய்மலை

4. எறும்பு வழிபட்ட கோயில் – திருவெறும்பூர்

5. காகம் வழிபட்ட கோயில் – குரங்கணில் முட்டம்

6. கருடன் வழிபட்ட கோயில் – திருச்சிறுகுடி

7. கழுகு வழிபட்ட கோயில் – திருக்கழுக்குன்றம்

8. கருங்குருவி வழிபட்ட கோயில் – திருவலிவலம்

9. சிலந்தி வழிபட்ட கோயில் – திருவானைக்காவல்

10. குரங்கு வழிபட்ட கோயில் – திருக்குரக்காவல்

11. எலி வழிபட்ட கோயில் – திருமறைக்காடு

12. தேனீ வழிபட்ட கோயில் – நன்னிலம்

13. வண்டு வழிபட்ட கோயில் – திருநல்லூர்

14. பசு வழிபட்ட கோயில் – ஆவூர் பசுபதீஸ்வரம், பட்டீஸ்வரம், திருவாடுதுறை, திருவீழிமிழலை, திருக்கோழம்பம், பெண்ணாகடம்.

15. பன்றி வழிபட்ட கோயில் – திருச்சிவபுரம்

16. நாரை வழிபட்ட கோயில் – திருநாரையூர்

17. ஜடாயு பறவை வழிபட்ட கோயில் – திருச்சிராப்பள்ளி

18. பாம்பு திருப்பாம்புரம், சீர்காழி, வாட்போக்கி, திருநாகேஸ்வரம், ருக்காளத்தி, கீழ்வேளூர், நாகைக்காரோணம்.

19. நண்டு வழிபட்ட கோயில் – திருநீடூர், திருந்துதேவன்குடி

20. முயல் வழிபட்ட கோயில் – திருப்பாதிரிப்புலியூர்

21. மயில் வழிபட்ட கோயில் – மயிலாடுதுறை

22. வெள்ளை யானை வழிபட்ட கோயில் – பெண்ணாகடம்

23. கருப்பு யானை- திருக்காளஹஸ்தி

24. ஐராவதம் வழிபட்ட கோயில் – திருப்பனந்தாள்

25. காமதேனு வழிபட்ட கோயில் – தில்லை ஸ்தானம்

26. பூனை வழிபட்ட கோயில் – மேலப்பாதி

27. தவளை வழிபட்ட கோயில் – ஆத்தூர்

28. மீன் வழிபட்ட கோயில் – கோயில் தேவராயன்பேட்டை

29. நாகம் வழிபட்ட கோயில் – தேப்பெருமாநல்லூர், சீர்காழி, வாட்போக்கி, திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், திருக்காளத்தி, கீழ்வேளூர், நாகைக்காரோணம்.

30. வாசுகி (பாம்பு) வழிபட்ட கோயில் – திருமாளம்

31. யானை வழிபட்ட கோயில் – திருப்பனந்தாள், பெண்ணாகடம், திருச்சாய்க்காடு,திருவானைக்கா, திலதைப்பதி, திருவெண்காடு.

இதையும் படிக்கலாம் : சிவபெருமானின் 19 அவதாரங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *