அருணகிரிநாதர் தம் திருப்பாடலில் ஆறு வீடுகள் அதாவது ஆறு திருப்பதிகளைக் குறிப்பிடுகிறார். இந்த ஆறு வீடுகளுக்கும் பல தத்துவ விளக்கங்களை வழங்குகிறார். இவையே நம் உடலில் உள்ள ஆறு ஆதாரங்களுக்கு விளக்கம் அளிக்கும் இடங்கள்.
மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞை ஆகிய ஆறும் மனித உடலின் ஆதாரங்கள் என்று யோகிகள் கூறுகிறார்கள்.
ஆறுமுகப் பெருமானின் ஆறுபடை வீடுகளையும் வழிபாட்டால் நோய்கள் நீங்கும், வலிகள் நீங்கி மனம் அமைதி பெறும். வளமான வாழ்வு வாழ்வீர்கள்.
அறுபடை வீடுகள்
1. திருப்பரங்குன்றம் – மூலாதாரம்
2. திருச்செந்தூர் – சுவாதிட்டானம்
3. பழனி – மணிபூரகம்
4. சுவாமிமலை – அநாகதம்
5. பழமுதிர்ச்சோலை – விசுத்தி
6. திருத்தணி – ஆக்ஞை
கருணை வடிவில் அடியார்களைக் காக்கும் ஆறுமுகங்களும் பன்னிரெண்டு கரங்களும் கொண்ட கலியுகக் கடவுள்.
முருகு என்ற சொல்லுக்கு அழகு, இளமை, தெய்வீகம், நறுமணம் என்று பொருள். “முருகு” என்ற பெயரோடு “அன்” என்ற பெயரையும் வைத்து “முருகன்” என்னும் பெயர் சூட்டிப் போற்றி வழிபடுகின்றனர்.
இதையும் படிக்கலாம் : எந்த ராசிக்கு எந்த முருகன் கோயில் சிறப்பு..!