பாஜக தேர்தல் அறிக்கை..!

2024 லோக்சபா தேர்தலுக்கான பாஜக கட்சியின் தேர்தல் அறிக்கை பற்றி பார்க்கலாம். மோடி கேரண்டி என்ற பெயரில் இந்த தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது.

பாஜக தேர்தல் அறிக்கை

  • ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அமல்படுத்தப்படும்.
  • மக்களின் வாழ்வை மேம்படுத்துவதே மோடியின் கேரண்டி.
  • இலவச ரேஷன் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடரும்.
  • 10 லட்சமாக இருந்த முத்ரா கடன் திட்டம் 20 லட்சமாக உயர்த்தப்படும்.
  • பெண்களுக்கு ரூ.1 சானிட்டரி பேட் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • 2025ம் ஆண்டு பழங்குடிகள் ஆண்டாக கொண்டாடப்படும்.நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும்.
  • பொது வாக்காளர் பட்டியல் முறை அமல்படுத்தப்படும்.
  • அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி மக்களுக்கு இலவச வீடுகள் வழங்கப்படும்.
  • ஆயுஷ்மான் திட்டம் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் விரிவுபடுத்தப்படும். 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ. 5 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்.
  • மானிய விலையில் கேஸ் சிலிண்டர் கொடுத்து வருகிறோம், அடுத்த கட்டமாக அனைத்து கிராமங்களுக்கும் பைப் லைன் மூலம் கேஸ் விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
  • புதிய மின் உற்பத்தி மூலம் அனைத்து குடும்பங்களுக்கும் மின்சாரம் விநியோகிக்க உள்ளோம்.
  • சோலார் மின் உற்பத்தி திட்டங்கள் நாடு முழுவதும் ஊக்குவிக்கப்படும்.
  • வேலைவாய்ப்பு முதலீடுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும்.
  • 2036ம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  • புதிதாக தொழில் துவங்கும் ஸ்டார்ட் அப்கள் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும்.
  • தொடர்ந்து பொதுமக்களுக்கு இலவச ரேசன் பொருட்களை வழங்குவோம்.
  • மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
  • 2025 பழங்குடியினரின் பெருமைக்குரிய ஆண்டாகக் கருதப்படும்.
  • இந்தியாவின் பெருமைமிகு தமிழ் மொழியை வளர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
  • தற்போதுள்ள இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *