பொடுகு தொல்லையிலிருந்து விடுபடுவது எப்படி?

தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதை தான் நாம் பொடுகு என்கிறோம். பெரும்பாலன இளைஞர்கள் இன்று பொடுகுத் தொல்லையினால் பாதிக்கப் படுகின்றனர்.

 • மிளகு தூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறிய பின் குளித்தால், பொடுகுத் தொல்லை நீங்கும்.
 • வெந்தயத்தை தலைக்கு தேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைவதுடன் பொடுகுத் தொல்லை நீங்கும்.
 • தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் தேய்த்து குளித்தால், பொடுகை நீங்கும்.
 • வேப்பிலை கொழுந்து, துளசி ஆகியவற்றை நைசாக அரைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.
 • வசம்பை நன்கு தூளாக்கி, தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து, அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறைந்து போகும்.
 • எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து வந்தாலோ அல்லது எலுமிச்சம் பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சை பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும்.
 • தலைக்கு குளிக்கும் போது, கடைசியாக குளிக்கும் தண்ணீரில், வினிகர் கலந்து குளித்தால், பொடுகை நீங்கும்.
 • நெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி, தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர பொடுகு நீங்கும்.
 • வாரம் ஒரு முறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்தால், பொடுகுத் தொல்லை நீங்கும்.
 • தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்னை நீங்கும்.
 • தேங்காய் பால் எடுத்த பின் கையை தலையில் நன்றாகத் தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு, மறைந்து விடும்.
 • முதல்நாள் சாதம் வடித்த தண்ணீரை எடுத்து வைத்து, மறுநாள் அதை தலையில் தேய்த்து குளித்தால், பொடுகை நீங்கும்.
 • தயிர், முட்டை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகு மறையும்.
 • துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.

தலையில் உள்ள பொடுகை நீக்குவதற்கு வேப்பம்பூ பயன்படுகிறது. நூறுகிராம் அளவுள்ள வேப்பம்பூவை, இருநூறு கிராம் தேங்காய் எண்ணையுடன் கலந்து நன்கு காய்ச்சி எடுக்க வேண்டும். காய்ச்சிய எண்ணெய் இளம் சூடாக இருக்கும் பொழுது எடுத்து தலையில் நன்கு தேய்த்து ஊறவைக்கவும். அரைமணி நேரம் கழித்து தலைக்கு குளியுங்கள். தொடர்ந்து வாரத்திற்கு மூன்று முறை இவ்வாறு வேப்பம்பூ கலந்த எண்ணையைத் தேய்த்து குளித்துவர, நம்மை பாடாய் படுத்திய பொடுகுத் தொல்லை போயே போய்விடும்.

இதையும் படிக்கலாம் : முடி உதிர்வை கட்டுப்படுத்தும் உணவுகள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *