தீபாவளி பண்டிகை எவ்வாறு கொண்டாட வேண்டும்?

உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியம், சைனம் மற்றும் பௌத்தம் உள்ளிட்ட மற்ற மதத்தினரும் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். வடஇந்தியாவில் 5 நாள் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியாவில் தீபாவளி ஒரு நாள் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

தீபாவளியை தீ ஒளி என முன்னோர் குறிப்பிடுகிறார்கள். வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஒளி என்பது வெற்றியின் அடையாளம். இருள் என்பது தோல்வியின் பொருள்.

தீபாவளி கொண்டாடுவதற்கான காரணங்கள்

கிருஷ்ணர் நரகாசுரன் என்ற அசுரனை அவனது கொடுமைகள், இம்சைகள் தாங்காது கொன்று அழிக்கின்றான். அத்தருணத்தில் நரகாசுரன் ஒரு வரம் கேட்கின்றான். பல கொடுமைகள் புரிந்த தீயவன் நான் இறந்துபோகும் இந்நாளை மக்கள் என்றென்றும் மகிழ்ச்சிகரமாக கொண்டாடவேண்டும் என்பதே அவ் வரம். தீயவன் ஒருவனின் அழிவில் மகிழ்வுற்ற மக்கள் அன்று கொண்டாடிய கொண்டாட்டமே இன்றும் தீபாவளியாக கொண்டாடப்படுவதாகக் கருதப்படுகின்றது.

தீபாவளி கொண்டாடும் முறை

தீபாவளி அன்று அதிகாலையில் எழுந்து கங்கா ஸ்தானம் செய்யணும் எல்லாராலயுமே வந்து கங்கைல போய் நீராட முடியாது என்பதால் ஒவ்வொரு தேவதைகளும் ஒவ்வொரு பொருள எழுந்தருளி மக்களுக்கு வந்து ஆசி வழங்குகிறார்கள். தீபாவளி அன்று அதிகாலை 3 மணியிலிருந்து அஞ்சரை மணி வரை சுடு தண்ணீரில் கங்காதேவி வாசம் செய்யறாங்க நல்லெண்ணெயில் மகாலட்சுமியும் சீயக்காயில தேவர்களும் வாசம் செய்யறாங்க.

இவங்களோட ஆசி நமக்கு முழுமையா கிடைக்கணும்னு தான் தீபாவளி நாள்ல அதிகாலையில வீட்ல உள்ள பெரியவங்க கையால நல்லெண்ண சீவக்காய் வச்சு சுடு தண்ணீர்ல குளிக்க வேண்டும் என்று முறை வைத்து இருக்கிறார்கள்.

இப்படி குளிக்கிறதுனால நம்முடைய பாவங்கள் நீங்கி கங்கையில குளித்ததற்கு இணையான புண்ணியம் நமக்கு கிடைக்கும் மகாலட்சுமி ஓட அருளும் கிட்டும்.

கங்கா ஸ்தானம் முடிச்சதுக்கு அப்புறமேட்டு நாம வாங்கின புத்தாடைகள், பலகாரங்கள், பட்டாசு எல்லாத்தையும் சாமி முன்னாடி வெச்சு வணங்கிட்டு அதுக்கப்புறம் பெரியவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கணும்.

தீபாவளி அப்படின்னாலே தீபங்களின் வரிசை என்பது தான் அர்த்தம். அதனால தீபாவளி அன்று வீட்டு பூஜை அறையில் 5 அகல் விளக்காவது ஏற்ற வேண்டும். தீபத்தின் ஒளி வழியாக கடவுளை வணங்குவது தீபாவளி கொண்டாட்டம் ஆகும்.

துஷ்ட சக்தியை விரட்டக்கூடியது பட்டாசு. பட்டாசு வெடிப்பதால் துஷ்ட சக்திகள் விலகும்.

மஞ்சள் தோஷத்தை நீக்கும் எனவே புது உடைய உடுத்தும் போது சிறிய அளவு மஞ்சள் வைத்த பிறகு புத்தாடை உடுத்த வேண்டும். இதனால் தோஷங்கள் நீங்கும்.

இதையும் படிக்கலாம் : தமிழ் புத்தாண்டு வரலாறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *