திமுகவின் தேர்தல் அறிக்கை 2024

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.

திமுகவின் தேர்தல் அறிக்கை

  • ஆளுநர் பதவி என்பது தேவையில்லாதது என்றாலும் இருக்கும் வரை முதல்வரின் ஆலோசனை பெற்று நியமிக்கப்பட வேண்டும்.
  • ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் பிரிவு 361 நீக்கப்படும்.
  • உச்ச நீதிமன்ற கிளை சென்னையில் அமைக்கப்படும்.
  • மத்திய அரசு பணிக்கு தமிழ் மொழியில் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை நடைபெறும்.
  • அனைத்து மாநில வளர்ச்சிக்கும் சம அளவு நிதி

 

  • திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கபப்டும்.
  • தாயகம் திரும்பிய இலங்கை தமிழருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும்.
  • ரயில்வே துறைக்குத் தனி பட்ஜெட் தாக்கல் செயய்யப்படும்.
  • புதிய கல்விக்கொள்கை ரத்து செய்யப்படும்.
  • நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும்.
  • நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

 

  • இந்தியா முழுவதும் மாதம் தோறும் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
  • தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு.
  • எல்.பிஜி சிலிண்டர் விலை 500 ஆக குறைக்கப்படும்.
  • பெட்ரோல் விலை Rs.75, டீசல் விலை Rs.65 ஆக குறைக்கப்படும்.
  • மகளிர் சுய உதவி குழுவுக்கு 10 லட்ச ரூபாய் வட்டி இல்லா கடன் வழங்கப்படும்.
  • ஜி.எஸ்.டி. சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும்.

 

  • வேளாண் விளைப்பொருட்களுக்கு மொத்த உற்பத்திச் செலவு + 50 விழுக்காடு என்பதை வலியுறுத்தி விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும்.
  • பாஜக அரசின் தொழிலாளர் நல விரோத சட்டங்கள் மறுசீரமைப்பு செய்யப்படும்.
  • தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக நீக்கப்படும்.
  • வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத போது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்.
  • குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019 ரத்து செய்யப்படும்.

 

  • ஒன்றிய அளவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.
  • தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டில் முக்கியத்துவம் குறையாமல் பாதுகாக்கப்படும்.
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் வேலை நாட்கள் 100-இல் இருந்து 150-ஆகவும், ஊதியம் 400 ரூபாயாகவும் உயர்த்தப்படும்.
  • இந்தியா முழுவதும் மாணவர்கள் பெற்ற கல்விக்கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான IIT, IIM, IISc, IIARI தமிழகத்தில் புதிதாக அமைக்கப்படும்.

 

  • மாணவர்களுக்கு வட்டியில்லாத கல்விக் கடனாக 4 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்.
  • இரயில்வே துறையில் வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகைகள் மீண்டும் வழங்கப்படும்.
  • புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து.
  • ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும்.

இதையும் படிக்கலாம் : 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *