பற்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கா? இந்த பழங்கள் போதுமே..!

fruits make your teeth whiter

பற்கள் வெள்ளையாக இருப்பது என்பது நம்முடைய அழகின் ஒரு பகுதியாக இருப்பது மட்டுமல்லாமல், சுகாதாரத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது. இன்று நாம் சாப்பிடும் பல உணவுகள் பற்களின் ஆரோக்கியத்தையும், நிறத்தையும் பாதிக்கின்றன. இதனால் பலரது பற்கள் மஞ்சள் நிறத்துடன் காணப்படுகிறது.

பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவது ஏன்?

  • பற்களின் எனாமல் எப்போது தேய்கிறதோ, அப்போது பற்களின் இரண்டாம் அடுக்கான மஞ்சள் நிற டென்டின் தெரிகிறது.
  • ஆரோக்கியமற்ற வாழ்க்கை நடைமுறைகளான  புகைப்படித்தல், மது அருந்ததுதல்
  • காஃபி மற்றும் கார்ப் அடங்கிய உணவுகளை அதிகமாக பயன்படுத்துவதாலும்.
  • தடிமனான பிரஷ்ஷை பயன்படுத்துவதால், பற்களின் மீது இருக்கும் எனாமலில் ஏற்படும் சேதம்.
  • உடல் பிரச்சனைகளால் அதிகப்படியான மருந்துகளை உட்கொள்ளுதல்.

வாழைப்பழம்

உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, பற்களின் ஆரோக்கியத்திற்கும் வாழைப்பழம் மிகவும் நல்லது. குறிப்பாக

வாழைப்பழத்தில் உள்ள கால்சியம், மக்னீசியம் மற்றும் மாங்கனீசு போன்றவை பற்களில் உள்ள அழுக்குகளை நீக்குவதோடு, மஞ்சள் கறைகளையும் போக்கி, பற்களை வெள்ளையாக்கும்.

தினமும் வாழைப்பழத்தை சாப்பிடுவதால் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீக்கிவிடும்.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி பழத்திற்கு பற்களை வெண்மையாக்கும் தன்மை உண்டு. பல் சிதைவு, நிறம் மாறுதல், பிளேக் போன்ற பிரச்சனைக்கு  ஸ்ட்ராபெர்ரி நிவாரணம் தருகிறது. மேலும் இது பிளீச்சிங் போல் செயல்பட்டு பற்களை பளிச்சிட வைக்க கூடியது.

ஸ்ட்ராபெர்ரி பழத்தைக் கொண்டு பற்களைத் தேய்த்தால், பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கும்.

இதையும் படிக்கலாம் : உதட்டில் உள்ள கருமையை போக்க எளிய வழிகள்..!

ஆப்பிள்

ஆப்பிள் பழத்தில் இருக்கும் மாலிக் அமிலம் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீங்கும். ஏனெனில் ஆப்பிளில் உள்ள இந்த அமிலம் வாயில் அதிகப்படியான எச்சில் சுரக்க உதவி புரிந்து, அதன் விளைவாக பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கி வெண்மையாகும்.

ஆப்பிள் சாப்பிட்டால் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கிறது.

ஆரஞ்சு

வைட்டமின் சி குறைபாட்டினால் பற்களின் ஈறுகளில் இரத்தம் கசியும். இதை அப்படியே விட்டால் அது வாயில் பையோரியாவிற்கு வழிவகுக்கும்.

ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டால், வைட்டமின் சி குறைபாடு நீக்குவதோடு, இப்பழத்தைக் கொண்டு பற்களைத் தேய்த்தால் பற்கள் பளிச்சென்று மின்னும்.

தர்பூசணி

தர்பூசணியில், ஸ்ட்ராபெர்ரியை விட அதிகமாக மாலிக் அமிலம் உள்ளது. இந்த அமிலம் பற்களை வெண்மையாக்கும் மற்றும் வாயில் எச்சில் சுரப்பை அதிகரிக்கும்.

தர்பூசணி பழத்தைக் கொண்டு பற்களைத் தேய்த்தால், பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கும்.

இதையும் படிக்கலாம் : தர்பூசணி பழத்தில் இவ்வளவு நன்மைகளா?

அன்னாசி

அன்னாசி ப்ரோமெலைன் எனப்படும் புரோட்டியோலிடிக் நொதியைக் கொண்டுள்ளது. இது பெல்லிகல் லேயரில் உள்ள புரதங்களை உடைக்கும்.

பற்கள் பெல்லிகல் எனப்படும் புரத அடுக்குடன் மூடப்பட்டிருக்கும். இந்த அடுக்கு பற்களைப் பாதுகாக்கிறது. அதே வேளையில் உணவுகளில் உள்ள நிறமியையும் உறிஞ்சுகிறது. இதனால் பற்களில் நிறமாற்றம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க தினமும் அன்னாசியை சாப்பிட வேண்டும்.

பப்பாளி

பப்பாளியில் உள்ள நொதியின் பெயர் பாப்பைன். இது பெல்லிகல் லேயரை சிதைக்கும் புரதத்தை உடைக்க உதவுகிறது.

இவை பற்களில் உள்ள கறைகள் அகற்றப்பட்டு, பற்களில் பிளேக்கிற்கு எதிராக ஒரு பாதுகாப்பு அடுக்கு உருவாகிறது. எனவே பப்பாளி சாப்பிடுவது மிகவும் நல்லது.

கொய்யாப் பழம்

கொய்யாப் பழம் மற்றும் கொய்யா இலைகள் பற்களில் உள்ள கறையைப் போக்க மிகச்சிறந்தது. கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரைக் கொண்டு வாயை கொப்பளித்து வந்தாலும் அல்லது தினந்தோறும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிடுவதன் மூலமும் பற்களில் உள்ள கறையைப் போக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *