செரிமான பிரச்சனை குணமாக இந்த பழம் சாப்பிடுங்க

வயிறு நிறைய உணவுகளை சாப்பிடக்கூடாது. இப்படி சாப்பிட்டால், செரிமான மண்டலம் உணவை ஜீரணிக்க முடியாமல், செரிமான பிரச்சனைகள் ஏற்படும். செரிமான பிரச்சனைகள் ஏற்படும் போது நாம் அடிக்கடி தயிர் சாப்பிடுவோம். ஏனெனில் தயிரில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியா செரிமான பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. ஆனால் தயிர் தவிர, சில பழங்கள் செரிமான பிரச்சனைகளில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும்.

சில பழங்களில் இயற்கையாகவே செரிமான நொதிகள் நிறைந்துள்ளன. அஜீரணம், மலச்சிக்கல், இரைப்பை அமிலத்தன்மை போன்ற செரிமான பிரச்சனைகளை சந்திக்கும் போது, ​​செரிமான நொதிகள் அடங்கிய சில பழங்களை சாப்பிட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும். இந்த பழங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு குடல் பிரச்சனைகளையும் தடுக்கும்.

பப்பாளி

பப்பாளி ஆண்டு முழுவதும் மிகவும் மலிவாக கிடைக்கும் பழம். பப்பாளி ஒரு அற்புதமான பழம், இது செரிமான பிரச்சனைகளை விரைவில் போக்க உதவும். ஏனெனில் இந்தப் பழத்தில் பாப்பைன் என்ற என்சைம் உள்ளது. இந்த நொதி புரதங்களை எளிதில் உடைக்கிறது. எனவே செரிமான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், பப்பாளியை வாங்கி சாப்பிடுங்கள். உடனடியாக நல்ல நிவாரணம் கிடைக்கும்.

வாழைப்பழம்

பப்பாளியைப் போலவே வாழைப்பழமும் ஆண்டு முழுவதும் எளிதாகவும் மலிவாகவும் கிடைக்கும் பழம். வாழைப்பழம் செரிமானத்திற்கு நல்லது. ஆனால் இதில் அமிலேஸ் இருப்பதால் தான் என்று பலருக்குத் தெரியாது. வாழைப்பழம் செரிமான பிரச்சனைகளை விரைவில் குணப்படுத்த இந்த என்சைம் பொருள் தான் முக்கிய காரணம்.

அன்னாசி

செரிமான பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் நன்மைகள் உள்ளன. ஏனெனில் இந்த பழம் புரதங்களை எளிதில் உடைத்து ஜீரணிக்க உதவுகிறது. இந்த பழத்தில் முக்கியமாக ப்ரோமெலைன் எனப்படும் செரிமான நொதி உள்ளது. இது செரிமான பிரச்சனைகளை உடனடியாக போக்க உதவுகிறது

மாம்பழம்

பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழத்தை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. பலரைக் கவர அதன் வாசனை ஒன்றே போதுமானது. மாம்பழத்தை கனமான உணவாக பலர் கருதுகின்றனர். அவை ஜீரணிக்க கடினமாக இருக்கும். ஆனால் இது தவறு. உண்மையில், மாம்பழத்தில் நீர் மற்றும் நார்ச்சத்து மட்டுமின்றி, அமிலேஸ் என்ற நொதியும் உள்ளது. உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது. அமிலேஸ் முதன்மையாக ஸ்டார்ச் போன்ற கார்போஹைட்ரேட்டுகளை சிறிய மூலக்கூறுகளாக உடைக்கிறது.

அவகேடோ

பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடுகிறீர்களா? இப்படி சாப்பிட்டால் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பை எளிதில் கரைக்க வெண்ணெய் பழத்தின் சில துண்டுகளை சாப்பிடுங்கள். எனவே, இதில் உள்ள லிபேஸ் கொழுப்பை எளிதில் உடைக்க உதவுகிறது.

இதையும் படிக்கலாம் : புளித்த ஏப்பத்தில் இருந்து விடுபட எளிய வழிகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *