தடைகள் நீங்க கணபதி ஹோமம் 

ganapathy homam

முழுமுதற் கடவுள் என போற்றப்படும் விநாயகர். நாம் செய்யும் எந்த ஒரு செயலும் தடைகள் இல்லாமல் நடைபெற கணபதியின் அருள் நமக்கு வேண்டும். நம் வாழ்வில் வரும் அனைத்து தடைகளையும் நீக்கி அருள் வேண்டி விநாயகருக்கு செய்யப்படும் ஹோமமே கணபதி ஹோமம் ஆகும்.

கணபதியை வணங்குவதன் மூலம் தடைகள் அகன்று, நம்பிக்கை, தைரியம், வெற்றி, வாழ்வில் வளம் போன்றவற்றைப் பெறலாம். குடும்பத்தின் நலம் வேண்டி முதலில் செய்ய வேண்டியது கணபதி ஹோமம்.

கணபதி ஹோமத்தை விநாயகர் வேள்வி என்று சொல்வதுண்டு.

கணபதி ஹோமத்திற்கு பொரி, அவல், சத்துமாவு, கொழுக்கட்டை, அப்பம், அறுகம்புல், கரும்புதி துண்டு, எருக்கம்பூ ஆகியவை அவசியமாகும்.

ganapathy

அச்சிறு விநாயகர்

விநாயகரே முழு முதற்கடவுள். ஒரு முறை சிவபெருமான் முப்புரங்களையும் அழிக்க புறப்பட்ட போது கணபதி மந்திரத்தை சொல்ல தவறினார். எனவே செல்லும் வழியில் அவரது தேர் பழுதானது. பெற்ற பிள்ளையாக இருந்தாலும் முதலில் கணபதியை வணங்கிய பிறகு தான் எந்த செயலையும் துவங்கவேண்டும் என்று சிவபெருமான் தான் உத்தரவிட்டார்.

அவரே அந்த விதியை கடைபிடிக்காததால் இந்த நிலை ஏற்பட்டது சிவபெருமானின் தேர் அச்சு முறிந்த இடத்தை இப்போது அச்சிறுபாக்கம் என்று அழைக்கிறார்கள். இந்த ஊர் செங்கல்பட்டு அருகே அமைந்துள்ளது எங்கு உள்ள விநாயகரை அச்சிறு விநாயகர் என்றே அழைப்பர்.

இதையும் படிக்கலாம் : விநாயகருக்கு உகந்த அருகம்புல் வழிபாடு

கணபதி ஹோமத்தை யார் செய்ய வேண்டும்?

கிரக பிரவேஷம் செய்பவர்கள், பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பவர்கள், புதிய தொழில் தொடங்குபவர்கள், வெற்றிக்காக ஏங்குபவர்கள் குறிப்பாக கேது தோஷத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கணபதி ஹோமத்தை செய்யலாம், ஏனெனில் கேதுவின் கிரக அதிபதி விநாயகர்தான்.

கணபதி ஹோம மந்திரம்

  • ஓம் கம் கணேசாய ஸ்வாஹா

கணபதி ஹோமம் பலன்கள்

கணபதி ஹோமத்தை பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் அதிகாலை நேரத்தில் செய்வது இன்னும் கூடுதல் பலன் தரும்.

புதிய தொழில் தொடங்குவதற்கு முன், கணபதி ஹோமம் செய்த பிறகு துவக்குவது மிகச்சிறந்த பலனைத் தரும்.

கிரகப்பிரவேசம்  நடத்தும் போது கணபது ஹோமம் நடத்தி, புதுவீடு புகுவது எக்காலமும் நன்மை தரும்.

கொழுக்கட்டையினால் ஹோமம் செய்தால் தொட்டதெல்லாம் ஜெயம் தான்.  மேலும் கரும்புத் துண்டால் ஹோமம் செய்தால் பொருள் வளம் பெறலாம்.

குடும்பத்தில் தொடர்ந்து சுகவீனம் ஏற்பட்டால் கணபதி  ஹோமம் நடத்தி உடல்நிலை நன்மையை பெறலாம்.

தேன் கொண்டு ஹோமம் செய்தால் கடன் தொல்லைகள் நீக்குவதுடன் செல்வச் சிறப்போடு சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

கேது திசை யார்யாருக்கு நடக்கிறதோ, அவர்களும் மஹாகணபதி ஹோமம் செய்வது நல்லது.

கடன் தொல்லையாலும் வறுமையாலும் வாடுபவர்கள் கருங்காலிக் குச்சியால் வேள்வி செய்வதால் அவற்றிலிருந்து விடுபடலாம்.

கணபதி ஹோம பூஜையில் இருந்து வரும் புகை வீட்டில் இருக்கும் தீய சக்திகளை விரட்டியடிக்கும். புத்தியிலும், மனதிலும் புத்துணர்ச்சி உண்டாகும். தனம், தானியம் சேர்க்கை அதிகமாக இருக்கும். நம் மீது உள்ள கண் திருஷ்டிகள் விலகி ஓடும்.

வருடத்தில் ஒரு முறை இந்த ஹோமத்தை செய்தால் வாழ்வில் வளமும், நலமும் பெருகும். ஒவ்வொரு மாதமும் தங்கள் பிறந்த நக்ஷத்திரத்தில் கணபதி ஹோமம் செய்வதால் வாழ்வில் தடைகள் அனைத்தும் நீங்கும்.

இந்த ஹோமம் செய்வதினால் நச்சரிக்கும் பணக் கஷ்டங்களில் இருந்து விடுபட்டு தனசேர்க்கையும், முன்னேற்றம் ஏற்படும்.

குறைந்த பட்சம் வருடத்துக்கு ஒரு முறையாவது வீட்டில் கணபதி ஹோமம் செய்வது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *