தட்சிணாமூர்த்தி அஷ்டகம்

guru bhagavana htakam

குருவாரம் என்று சொல்லப்படுகிற வியாழக்கிழமை, குரு பிரம்மாவையும் சிவ சொரூபமாகத் திகழும் ஸ்ரீதட்சிணா மூர்த்தியையும் மகான்களையும் சித்தர் பெருமக்களையும் வணங்கி வழிபடுங்கள். வளமும் நலமும் தந்தருளும் பிரார்த்தனைகள் இவை என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

வியாழக்கிழமைகளில், தட்சிணாமூர்த்தி அஷ்டகம் சொல்லிப் பாராயணம் செய்து, ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து, சுண்டல் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ளுங்கள்.

தட்சிணாமூர்த்தி அஷ்டகம்

அகணித குணகணமப்ரமே மாத்யம்

ஸகல ஜகத் ஸ்திதி ஸம்யமாதி ஹேதும்!

உபரத மனோ யோகி ஹ்ருன் மந்திரம் தம்

ஸதத மஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே!

என்று சொல்லி வணங்கிவிட்டு தொடர்ந்து சொல்லுங்கள்.

 

நிரவதி ஸுக மிஷ்ட தாதாரமிட்யம்

நதஜன மனஸ்தாப பேதைக தக்ஷம்

பவ விபின தவாக்னி நாமதேயம்

ஸதத மஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே!

 

த்ரிபுவனகுரும் ஆகமைக ப்ரமாணம்

த்ரிஜகத் காரண ஸூத்ர யோக மாயம்

ரவிசத பாஸ்வர மீஹீத ப்ரதானம்

ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!

 

அவிரத பவ பாவனாதி தூரம்

பத பத்மத்வய பாவிணாம் அதூரம்

பவ ஜலதி ஸுதாரணாங்கிரி போதம்

ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!

 

க்ருத நிலய மனிசம் வடாகமூலே

நிகம சிகாப்ராத போதிதைக ரூபம்

த்ருத முத்ராங்குஸி கம்ய சாருரூபம்

ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!

 

த்ருஹிண ஸுத பூஜிதாங்க்ரி பத்மம்

பத பத்மானத மோக்ஷதான தக்ஷம்

க்ருத குருகுலவாஸ யோகி மித்ரம்

ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!

 

யதிவரஹ்ருதயே ஸதாவிபாந்தம்

ரதிபதி சதகோடி ஸுந்தராங்க மாத்யம்!

பரஹித நிரதரத்மனாம் ஸுஸேவ்யம்

ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!

 

ஸ்மித தவள விகாஸிதான னாப்ஜம்

ஸ்ருதி ஸுலபம் வ்ருஷபாதிருட காத்ரம்

ஸித ஜலஜ ஸுசோப தேணா காந்திரம்!

ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!

 

வ்ருஷப க்ருதமிதம் இஷ்ட ஸித்திதம்

குருவர தேவ ஸந்திதௌ படேத்ய:

ஸகல துரித துக்க வர்க்க ஹசனிம்

வ்ரஜதி சிதம் ஞானவான் சம்புலோகம்!

இந்த  தட்சிணாமூர்த்தி அஷ்டகம் சொல்லி பிரார்த்தனை செய்யுங்கள். கஷ்டமெல்லாம் தீர்த்தருள்வார் ஸ்ரீதட்சிணாமூர்த்தி.

திருமணமாகி 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லாமல் இருப்பவர்கள் ஸ்ரீதட்சணாமூர்த்தி அஷ்டகத்தை வியாழக்கிழமைகளில் மாலை 5 மணி முதல் 7 மணி வரை ஒன்பது தடவை பாராயணம் செய்தால் பலன் கிடைக்கும்.

இதையும் படிக்கலாம் : 108 லிங்கம் போற்றி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *