வேகமாக கூந்தல் வளர 5 இயற்கை வழிகள்

வேகமாக கூந்தல் வளர 5 இயற்கை வழிகள்

நீளமான பளபளக்கும் கூந்தலுக்கு யாருக்குத் தான் ஆசை இருக்காது ஆனால் பெரும்பாலும் போதுமான கூந்தல் போஷாக்கு இல்லாமை மற்றும் டேமேஜ் காரணமாக நம் கூந்தலின் இயற்கையான வளர்ச்சி தடைபடுகிறது.

1. உச்சந்தலையில் உள்ள முடியுடன் ஒப்பிடுகையில் நுனிமுடி மெல்லியதாகவும், டேமேஜ் ஆனதாகவும் இருப்பதை கவனித்து இருப்போம். இதற்கு முக்கிய காரணம் முடியில் போதுமான அளவு ஊட்டச்சத்து இல்லாமல் இருப்பதே. எனவே முடி டேமேஜ் ஆவதை தடுக்க ஒவ்வொரு முறை தலைக்கு குளிக்கும் போது மறக்காமல் கண்டீஷனிங் செய்ய வேண்டும். இது முடியின் வேரை அடைத்து, முடி உடைவதைத் தடுக்கிறது. மேலும் இது முடியை ஆரோக்கியமானதாக மாற்றி சீக்கிரம் வளர உதவுகிறது.

2. மிருதுவான சூட்டில் எண்ணெய் மசாஜ் செய்வதன் மூலம் மனஅழுத்தம் குறையும். எனவே வாரம் ஒரு முறை சூடான எண்ணெயை பயன்படுத்தி முடியை மசாஜ் செய்வோம். இப்படி செய்வதால், கூந்தல் வாரும் போது, ஒரு முடி கூட தரையில் விழாத வண்ணம் முடியின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துகிறது. மேலும் தேங்காய், ஆலிவ் அல்லது லேவேண்டர் எண்ணெயைப் பயன்படுத்தி மசாஜ் செய்வது கூந்தலை பளபளவென மாற்றுவதுடன் சீக்கிரம் வளரவும் உதவுகிறது.

3. கூந்தலை அதிகமாக சீவுவது என்பது முடி கொட்டுவதுடன், தலை முடிக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை கேட்டிருப்போம். ஆனால் முடி கொட்டுவது என்பது உபயோகிக்கும் சீப்பை பொருத்து இருக்கிறது. சிந்தடிக் பிரிஸ்ட்ல் பிரஷ்களைக் கொண்டு முடி சீவும் போது அது முடியில் சிக்கை உண்டாக்கி டேமேஜை ஏற்படுத்துகிறது. எனவே சரியான போர் பிரிஸ்ட்ல் சீப்புகளை பயன்படுத்தி முடி சீவுவது, உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. எனவே இரவில் ஓய்வெடுப்பதற்கு முன்பு வரை குறைந்தபட்சம் 50 முறையாவது தலைமுடியை சீவுங்கள். இவ்வாறு செய்வது முடிவேர்களை வலுவாக்கி முடி சீக்கிரமாக வளர உதவுகிறது.

4. நம்மில் பலர் தலைக்கு ஷெம்பூ தேய்த்து குளித்த பின்னர், ஈரமான கூந்தலுடன் தலையில் துண்டைக் கட்டி வைப்போம். ஆனால் இந்த பழக்கத்தால் ஏற்படும் குறைபாடுகளை சிறிது சிறிதாக உணரமுடியும். ஈரமான முடி என்பது அதிக முடி உதிர்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும். அதிலும் ஈரமான கூந்தலில் துண்டை சுற்றி வைப்பது என்பது இன்னும் மோசமான விளைவை ஏற்படுத்தும். ஏனெனில் துண்டில் உள்ள ஏராளமான இழைகள், முடிகளை இழுத்து முடி உதிர்தலை ஏற்படுத்தும். இந்த பழக்கத்தை விட முடியாவிட்டால் saftana துண்டுகளை பயன்படுத்தி, முடி துவட்டுங்கள்.

5. முட்டையை விட முடியின் போஷாக்கிற்கு சிறந்த தீர்வு என்னாவாக இருக்க முடியும். முட்டையில் நிறைந்துள்ள புரோட்டீன்கள் முடிக்கு, அற்புதமான போஷாக்கை அளித்து, முடி வேகமாக வளர உதவுகிறது. முட்டையின் வெள்ளைக் கருவுடன், ஒரு ஸ்பூன் எண்ணெயை (ஆலிவ் ஆயில் சிறந்தது) நன்றாக கலந்து முடி மற்றும் உச்சந்தலையில் அப்ளை செய்யுங்கள். பின்னர் 20 நிமிடம் கழித்து ஷெம்பூ உபயோகித்து நன்றாக முடியை அலசுங்கள். இதை மாதத்திற்கு ஒரு முறை விடாமல் செய்துவர கற்பனைக் கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு நல்ல தீர்வை கொடுக்கும்.

இதையும் படிக்கலாம் : முடி உதிர்வை கட்டுப்படுத்தும் உணவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *