ரம்ஜான் பண்டிகையின் சிறப்புகள்

முஸ்லிம்கள் ரம்ஜானை எதிர்நோக்குகிறார்களோ இல்லையோ, நாம் அதை இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறோம். அதாவது, நமக்கு ஒரு முஸ்லீம் நண்பர் இருந்தாலும், ரம்ஜானில் பிரியாணி வரும் என்று எதிர்பார்க்கிறோம். ரம்ஜான் பண்டிகையின் சிறப்புகளை பற்றி பார்க்கலாம்.

ரம்ஜான் பண்டிகையின் சிறப்புகள்

  • ரமலான் அல்லது ரம்ஜான் என்று அழைக்கப்படும் இந்த நோன்பு காலம் முஸ்லீம் வசந்த காலம் என்று அழைக்கப்படுகிறது.
  • ரமலான் மாதமே அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்.
  • இம்மாதத்தில் தான் முஹம்மது நபிக்கு இறைவன் குர்ஆனை அருளினான் என்று இஸ்லாமிய புராணம் கூறுகிறது.
  • பொதுவாக, முஸ்லிம்கள் சந்திரனின் இயக்கத்தின் அடிப்படையில் மாதங்களைக் கணக்கிடுகிறார்கள்.
  • அதுபோலவே ரமலான் மாதமும் இறைவனுடன் நெருங்கிப் பழகும் மாதம், சொர்க்கத்தின் கதவுகளைத் திறக்கும், நரகத்தின் கதவுகளை மூடும் மாதம்.
  • ரமலான் மாதமும் பல நன்மைகள் நிறைந்த மாதமாகும்.
  • அதுபோலவே இந்நாட்களில் முஸ்லிம்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் மற்ற நாட்களைக் காட்டிலும் பல மடங்கு அதிகம். இதன் மூலம், மக்கள் எளிதாக சொர்க்கத்திற்கு செல்ல முடியும்.
  • இந்த ரம்ஜான் மாதத்தில் கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அதாவது ரமலான் நோன்பினால் எல்லாம் வல்ல அல்லாஹ் நமது முந்தைய பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கிறான்.
  • ரமலான் கருணையை மட்டும் போதிக்கவில்லை. முஸ்லிம்களிடையே ஒற்றுமையையும் போதிக்கின்றது.
  • நோன்பின் போது இயன்ற அளவு நற்செயல்களைச் செய்யவும், தீய செயல்களைத் தவிர்க்கவும் குர்ஆன் பரிந்துரைக்கிறது.
  • இந்த ரம்ஜானில் முஸ்லிம்கள் அதிக தானம், தர்மம் செய்ய வேண்டும்.
  • இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும்.

ரம்ஜான் நோன்பு காலத்தில் தவறவிட்ட விரதத்தை ரம்ஜான் பெருநாளுக்கு பின்னர் வரும் 6 நாட்களில் நோன்பு இருந்து கொள்ளலாம். ஆனால் ரம்ஜான் பண்டிகை அன்று நோன்பு இருக்கக்கூடாது.

இதையும் படிக்கலாம் : 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *