இதய ஆரோக்கியதற்கு முட்டை நல்லதா..?

முட்டை கொழுப்புச்சத்திற்கான வளவமான ஆதரத்தை கொண்டது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் முட்டையில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

ஆய்வு முடிவுகள்

ஹார்ட் இதழில் வெளியிடப்பட்ட 2018 ஆம் ஆண்டு ஆய்வில், சீனாவை சேர்ந்த அரை மில்லியனுக்கும் அதிகமான பெரியவர்கள் தினந்தோறும் சுமார் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் கணிசமாகக் குறையும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

மிதமான அளவில் முட்டை உட்கொள்வது இரத்தத்தில் இதய ஆரோக்கியமான வளர்சிதை மாற்றங்களின் அளவை எவ்வாறு அதிகரிக்கும் என்று ஆய்வு கண்டறிந்துள்ளது.

மிதமான அளவு முட்டைகளை உண்ணும் நபர்களின் இரத்தத்தில் அபோலிபோபுரோட்டீன் A1 என்ற புரதத்தின் அளவு அதிகமாக இருப்பதாக பகுப்பாய்வு முடிவுகள் காட்டுகின்றன. இது ‘நல்ல லிப்போபுரோட்டீன்’ என்றும் அறியப்படும் உயர் அடர்த்தி கொழுப்புப்புரதத்தின் (HDL) கட்டுமானத் தொகுதி ஆகும். இதனைக் கொண்டுள்ள நபர்களின் ரத்தத்தில் அதிக பெரிய HDL மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது. இது இரத்த நாளங்களில் இருந்து கொழுப்பை அகற்ற உதவுகிறது மற்றும் அதன் மூலம் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும் அடைப்புகளிலிருந்து பாதுகாக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதய நோயுடன் தொடர்புடைய 14 வளர்சிதை மாற்றங்களை ஆராய்ச்சியாளர்கள் மேலும் அடையாளம் கண்டுள்ளனர். குறைவான முட்டைகளை உண்ணும் பங்கேற்பாளர்களின் இரத்தத்தில் குறைந்த அளவிலான நன்மை பயக்கும் வளர்சிதை மாற்றங்கள் மற்றும் அதிக அளவு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

முட்டை நன்மைகள்

தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். அதனால் உடல் நலக் குறைபாடு வராது. உடலுக்குத் தேவையான அத்தனை ஊட்டச்சத்தும் ஓரளவுக்கு கிடைத்துவிடும்.

முட்டையில் கொழுப்புச் சத்து மட்டுமே இருப்பதாக நினைத்து அதைத்  தவிர்க்கின்றனர். முட்டையில் உயர் தர புரதச்சத்து உள்ளது. ஒரு முட்டையில் 7 கிராம் அளவுக்கு உயர் தரமான புரதச்சத்து உள்ளது. மேலும் இரும்புச் சத்து, வைட்டமின்கள் என ஊட்டச்சத்துகளின் பெட்டகமாக முட்டை விளங்குகிறது.

தினமும் ஒரு முட்டைசாப்பிட்டு வருவது உடலில் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியைத் தூண்டுகிறது. குறிப்பாக ரத்த சோகை பிரச்னை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முட்டை என்ற அளவில் இரண்டு மாதத்துக்கு எடுத்துக்கொள்வது நல்லது என்றும் பரிந்துரைக்கின்றனர்.

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் கூட முட்டையைசாப்பிடலாம். இது வயிறு நிறைந்த உணர்வைத் தருவதுடன் உடல் எடை குறைப்பு முயற்சி தோல்வியடையாமல் செல்லவும் உதவும். முட்டைசாப்பிடும் போது நன்றாக சாப்பிட்டது போன்ற உணர்வு ஏற்படும். இது மற்ற கார்போஹைட்ரேட் உணவுகள் மீது ஆசை ஏற்படுவதைத் தடுக்க உதவும்.

இதையும் படிக்கலாம் : உடல் வெப்பத்தை தணிக்கும் உணவுகள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *