முகம் செக்க செவேல்னு ஆக முல்தானிமெட்டி போதுமே..!

முகத்தை எப்போதும் பளபளப்பாகவும் அழகாகவும் வைத்திருக்க, இந்த முல்தானிமெட்டி பொடியை பயன்படுத்துங்கள்.

சிலருக்கு சிறு வயதிலேயே முதுமைக்கான முக அமைப்பு இருக்கும். இது பலரை கவலையடையச் செய்கிறது. கருப்பாக இருந்தால், மாநிறம் இருந்தாலும் நமக்கு சுண்டினால் ரத்தம் வரும் வண்ணம் இல்லையே என்று கவலைப்படுகிறார்கள்.

முல்தானிமெட்டி

முல்தானிமெட்டி சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் கறைகளை நீக்கும். இது சருமத்தை அழகாக்குகிறது மற்றும் அழுக்குகளை நீக்குகிறது. கரும்புள்ளிகளையும் நீக்குகிறது.

எலுமிச்சை சாறு

இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குகிறது மற்றும் கிருமி நாசினிகள் பண்புகளைக் கொண்டுள்ளது. முக எரிச்சல், அரிப்பு மற்றும் நமச்சல் ஆகியவற்றை நீக்குகிறது. சுருக்கம் வராமல் இருக்கும்.

மஞ்சள் தூள்

மஞ்சளில் கிருமி நாசினிகள் உள்ளன. இறந்த சரும செல்களை அகற்றவும். இது சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. தோல் நிறம் மற்றும் முக இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. முகப்பருவை தடுக்கும். கடலை மாவு போலவே, இது சருமத்தை மென்மையாக்கும். சுருக்கம் ஏற்படாது. இளமையாக இருக்க வைக்கும்.

தேன்

தேன் கிருமிநாசினியாக செயல்படுகிறது. தேனீக்கள் பல பூக்களிலிருந்து தேன் சேகரிக்கின்றன, அவை மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளன. மேலும் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது. இது சுருக்க எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. சருமத்திற்கு அழகையும் பொலிவையும் தரும்.

பயத்த மாவை

சருமத்தை மென்மையாக்க பயத்த மாவை பயன்படுத்தவும். முகத்தின் அழகைக் கெடுக்கும் முகப்பருவைப் போக்கி, முகத்தை கண்ணாடி போல் பளபளப்பாக மாற்றும். அவற்றில், தேன் அரை டீஸ்பூன், முல்தானிமெட்டி தூள் 1 டீஸ்பூன், எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன், சிறிது மஞ்சள் தூள், பயத்த மாவு 1/4 டீஸ்பூன், கடலை மாவு 1/4 டீஸ்பூன் எடுக்க வேண்டும்.

நீரில் விட்டு குழைத்து பின் அதை நன்றாக கலந்து முகத்தில் பூசி 10 முதல் 15 நிமிடங்கள் வரை காய வைத்து பிறகு மிதமான தண்ணீரில் கழுவ வேண்டும். இது போல் மாதம் 2 முறையோ அல்லது 3 முறையோ போட்டால் நல்ல பலனை தரும்.

இதையும் படிக்கலாம் : முகம் வெள்ளையாக கற்றாழை மாஸ்க் போடுங்க..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *