மாப்பிள்ளை சம்பா அரிசி பயன்கள்

பாரம்பரிய அரிசி வகைகளை எடுத்து கொண்டோல் அதில் நிறைய ரகங்கள் இருக்கிறது. அதில் ஒன்று மாப்பிள்ளை சம்பா அரிசி. இந்த அரிசி நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும்.

மாப்பிள்ளை சம்பா பெயருக்கேற்றபடி மாப்பிள்ளைகளுக்கு புது மாப்பிள்ளையாக போகிறவர்களுக்கு மிகவும் தேவை.

ஆண்களுக்கு ஏற்றது மாப்பிள்ளை சம்பா

உடலுக்கு அதிக அளவில் பலம் அளிக்கக்கூடிய மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால் புது மாப்பிள்ளை போல இருக்கலாம். எனவே தான் அதிக அளவில் இளம் வயது ஆண்களுக்கு மாப்பிள்ளை சம்பா அரிசியை சாப்பிட கொடுத்துள்ளனர்.

உடலுக்கு வலுவையும் ஏராளமான சத்துகளையும் தரும் மாப்பிள்ளை சம்பாவின் சிறப்பே ஆண்மையை பலப்படுத்தும் என்பது தான்.

மாப்பிள்ளை சம்பா சத்துக்கள்

மாப்பிள்ளை சம்பா அரிசி சிவப்பு நிறத்தில் இருக்கும். இதில் புரதம், நார்ச்சத்து, இரும்பு மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளது. இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும். மாப்பிள்ளை சம்பா அரிசியை சமைத்து அதில் தண்ணீர் சேர்த்து மறுநாள் சாப்பிட்டாலும் அதில் சத்துக்கள் நிரம்பியிருக்கும். இந்த தண்ணீரை மணமகனுக்கு கொடுக்கலாம். உடலும் வலிமையும் புத்துணர்ச்சி பெறும்.

மாப்பிள்ளை சம்பா அரிசி பயன்கள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

மாப்பிள்ளை சம்பா அரிசியை தினசரி உணவில் சேர்த்து வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சாதாரண காய்ச்சல், தலைவலி போன்றவை கூட சில நாட்களில் சரியாகி பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.

இது சோர்வைப் போக்கி, உடலை சுறுசுறுப்பாகச் செய்து, நரம்புகளை வலுவாக்கும். அதிகப்படியான நார்ச்சத்து புற்றுநோயைத் தடுக்கவும் உதவுகிறது. உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்பைக் கரைப்பதன் மூலம், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். இதய நோய் தடுக்கக்கூடியது.

நீரிழிவு நோயாளிகள்

வெள்ளை அரிசியை காட்டிலும் மாப்பிள்ளை சம்பா சிவப்பு அரிசி நீரிழிவு பிரச்சனை இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. இவற்றில் உள்ள நார்ச்சத்து சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தி நரம்புகளை வலுவாக்கும். தாம்பத்தியக் குறைபாடுகள் நீங்கும். நரம்பு மண்டலம், இரத்த அமைப்பு மற்றும் தசை மண்டலம் பலப்படுத்தப்படுகின்றது.

ஹீமோகுளோபின் அதிகரிக்கும்

மாப்பிள்ளை சம்பா அரிசியில் இரும்பு மற்றும் துத்தநாகம் உள்ளது. இரத்த சோகை உள்ளவர்கள் இதனை சாப்பிட்டால் ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கும். நார்ச்சத்து நிறைந்த இந்த அரிசியை சமைத்தால் எளிதில் ஜீரணமாகும். வயிறு சம்பந்தமான நோய்கள், வயிற்றுப்புண்கள் குணமாகும். மாப்பிள்ளை சாம்பல் அரிசியை கஞ்சி, கொழுக்கட்டை, புட்டு, போன்றவற்றைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கு செய்து தர எலும்புகள் வலுப்பெறும்.

ஆண்மை குறைபாடு நீங்கும்

ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு பிரச்சனை சமீப காலமாக அதிகரித்துவருகிறது. அன்றாட உணவு பழக்கங்கள் மாற்றத்திலும் வாழ்க்கை முறையும் இதற்கு பெரும் காரணங்களாகிவிட்டது.

உடலுக்கு பலம் தரக்கூடிய சத்துகள் மாப்பிள்ளை சம்பா அரிசியில் உண்டு. ஆண்கள் மாப்பிள்ளை சம்பா அரிசியில் சமைத்த சாதத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கிடைக்கும். ஒரு மாதத்தில் பலனும் தெரிய ஆரம்பிக்கும். பெண்களின் மலட்டுத்தன்மையை போக்கும்.

மாப்பிள்ளை சம்பா அரிசி சமைப்பது எப்படி?

மாப்பிள்ளை சம்பா அரிசியில் சமைத்த சாதம் ருசியாக இருக்கும். இந்த சாதத்தில் தண்ணீர் ஊற்றி மறுநாள் காலை பழைய சோரகவும் சாப்பிடலாம்.

மாப்பிள்ளை சம்பா அரிசியில் கஞ்சி, இட்லி, தோசை, புட்டு, கொழுக்கட்டை செய்து சாப்பிடலாம்.

மாப்பிள்ளை சம்பா சாதம் வடித்த கஞ்சியில் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்ந்து இளஞ்சூட்டில் குடித்து வந்தால் வயிற்றுப்புண், வயிறு வலி, வாய்ப்புண் குணமாகும்.

மாப்பிளை சம்பா அரிசியை சமைப்பதற்கு முன் 4 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். இது வெள்ளை அரிசி போல் சீக்கிரம் வேகாது.

மாப்பிள்ளை சம்பா பருவம்

மாப்பிள்ளை சம்பா நீண்ட கால (155 – 160) நெல் வகையாகும், ஜூலை 15 முதல் ஜனவரி 14 முடிய சம்பா பருவத்திலும், மற்றும் செப்டம்பர் 15 முதல் பிப்ரவரி 14 வரையான பின் சம்பா பருவத்திலும் பயிரிடப்படுகிறது.

மாப்பிள்ளை சம்பா அரிசி தீமைகள்

மாப்பிள்ளை சம்பா அரிசியை அதிக அளவில் சாப்பிட்டால் மட்டுமே இந்த பக்கவிளைவுகள் ஏற்படும். இதை அதிக அளவில் சாப்பிட்டால் வாயு, வயிற்று உப்புசம், ஒவ்வாமை, தசைவலி போன்றவை ஏற்படலாம்.

இதையும் படிக்கலாம் : பாரம்பரிய அரிசி வகைகளும் அதன் பயன்களும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *