விரும்ய மணாளனைக் கைபிடிக்க சொல்லும் ஸ்லோகம்

பூர நட்சத்திர தினங்களில் இத்துதியை சொல்லி வந்தால் ஆண்டாளுக்கு ரங்கநாதர் மணமகனாகக் கிடைத்தது போல் கன்னி பெண்ணுக்கு மனம் விரும்பும் மணாளனைக் கைபிடிப்பர்.

ஸ்ரீவிஷ்ணுசித்த குலநந்தன கல்பவல்லீம்
ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தன யோக த்ருச்யாம்
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவான்யாம்
கோதாம் அனஸ்ய சரண:சரணம் ப்ரபத்யே

பொருள்

கற்பக விருட்சத்தில் பூக்கும் மலர் போல விஷ்ணு சித்தரின் குலத்தில் அவதரித்த ஆண்டாளே நமஸ்காரம். ஹரிசந்தன மரத்தின் கீழ் வாசம் செய்யும் ரங்கராஜனாகிய திருமாலின் மனம் கவர்ந்தவளே நமஸ்காரம். பூமிதேவியின் அம்சத்தைக் கொண்ட தாயே, உன் மனம் போல் மாங்கல்யம் அமைந்தாற்போன்று எனக்கும் அருள் செய்வாயாக. மகாலட்சுமியின் அம்சத்தைக் கொண்ட அன்னையே! என் வாழ்க்கையில் மங்களமும், வளமும் பெருக வரமருள்வாய் அம்மா.

இதையும் படிக்கலாம் : திருமண தடை நீங்க ஸ்வயம்வர பார்வதி மந்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *