நவகிரக ஸ்லோகம்

நவகிரக ஸ்லோகம் துதியை தினந்தோறும் பாராயணம் செய்து வர நவகிரக கோள்களினால் விளையும் துயரங்கள் அகன்று நன்மையே நிலைக்கும்.

நவகிரக ஸ்லோகம்

ஆதாரே ப்ரதம: ஸஹஸ்ர கிரண: தாராதிப: ஸவாலயே

மா ஹேயோ மணிபூரகே ஹ்ருதிபுத கண்டேச

வாசஸ்பதி:

ப்ருமத்யே ப்ருகு நந்தன: தினமணே: புத்ர த்ரிகூட

ஸ்தலே

நாடீ மர்மஸு ராஹு கேது குளிகர: குர்யாத் ஸனோ

மங்களம்.

பொருள்

மூலத்தில் கதிரவனும் ஸ்வாதிஷ்டானத்தில் சந்திரனும் மணிபூரகத்தில் சீலமிகு அங்காரகனும் அநாகத்தில் புதனும் விசுத்தியிலே குருவும் சுக்கிரபகவான் ஆக்ஞையிலும் சனிபகவான் சுழிமுனையிலும் நாடிதனில் ராகுவும் மர்மக் குறிதனில் கேதுபகவானும் நின்று எங்களுக்கு எப்போதும் நன்மைகளைப் பெருக்கட்டும்; எங்கள் துயரங்களை விலக்கட்டும்.

இதையும் படிக்கலாம் : நவதிருப்பதி ஸ்தலங்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *