நவக்கிரக தலங்கள்

navagraha temples

அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்யவும், அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார்.

சிவனுக்கு பூஜை செய்த தாமரை மலர்களை தாமிரபரணியில் வீசும்படியும், அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட, ஒன்பது பூக்களும் பல இடங்களில் கரை ஒதுங்கின.

இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை நவக்கிரக தலம் எனப்பட்டன. நவக்கிரக தலங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது.

நவக்கிரக தலங்கள்

சூரிய தலம்

தலம் பாபநாசம்
அம்சம் சூரியன்
நட்சத்திரம் கார்த்திகை, உத்திரம்
மூலவர் ஸ்ரீபாபநாசர் என்ற கைலாச நாதர்
அம்பாள் ஸ்ரீஉலகாம்பிகை
இருப்பிடம் திருநெல்வேலியில் இருந்து மேற்கே 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

சந்திர தலம்

தலம் சேரன்மகாதேவி
அம்சம் சந்திரன்
நட்சத்திரம் ரோகினி, ஹஸ்தம், திருவோணம்
மூலவர் ஸ்ரீஅம்மைநாதர்
அம்பாள் ஸ்ரீஆவுடைநாயகி
இருப்பிடம் திருநெல்வேலியில் இருந்து மேற்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

செவ்வாய் தலம்

தலம் கோடகநல்லூர்
அம்சம் செவ்வாய்
நட்சத்திரம் மிருக சிரீடம், சித்திரை, அவிட்டம்
மூலவர் ஸ்ரீகைலாசநாதர்
அம்பாள் ஸ்ரீசிவகாமி
இருப்பிடம் திருநெல்வேலியில் இருந்து மேற்கே சேரன்மகாதேவி செல்லும் கல்லூர் சாலையில் நடுக்கல்லுருக்கு தெற்கே ஒருகிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

புதன் தலம்

தலம் தென் திருப்பேரை
அம்சம் புதன்
நட்சத்திரம் ஆயில்யம், கேட்டை, ரேவதி
மூலவர் ஸ்ரீகைலாசநாதர்
அம்பாள் ஸ்ரீஅழகிய பொன்னம்மை
இருப்பிடம் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

குரு தலம்

தலம் முறப்பநாடு
அம்சம் வியாழன் (குரு)
நட்சத்திரம் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
மூலவர் ஸ்ரீகைலாச நாதர்
அம்பாள் ஸ்ரீசிவகாமி
இருப்பிடம் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

சுக்கிரன் தலம்

தலம் சேர்ந்த பூமங்கலம்
அம்சம் சுக்கிரன்
நட்சத்திரம் பரணி, பூராடம், பூரம்
மூலவர் ஸ்ரீகைலாசநாதர்
அம்பாள் ஸ்ரீசௌந்தர்யா நாயகி
இருப்பிடம் திருச்செந்தூரில் இருந்து புன்னைக்காயல் செல்லும் சாலையில் ஆத்தூரில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில்அமைந்துள்ளது.

சனி தலம்

தலம் ஸ்ரீவைகுண்டம்
அம்சம் சனி
நட்சத்திரம் பூசம், அனுஷம், உத்திரட்டாதி
மூலவர் ஸ்ரீகைலாச நாதர்
அம்பாள் ஸ்ரீசிவகாமி
இருப்பிடம் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

கேது தலம்

தலம் ராஜபதி
அம்சம் கேது
நட்சத்திரம் அசுவதி, மகம், மூலம்
மூலவர் ஸ்ரீகைலாசநாதர்
அம்பாள் ஸ்ரீஅழகிய பொன்னம்மை என்ற சிவகாமி
இருப்பிடம் தென்திருப்பேரை கோவிலில் இருந்து அதே பாதையில் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

ராகு தலம்

தலம் குன்னத்தூர் (சங்காணி)
அம்சம் ராகு
நட்சத்திரம் திருவாதிரை, சுவாதி, சதயம்
மூலவர் ஸ்ரீகோத்த பரமேஸ்வரர் என்ற கைலாய நாதர்
அம்பாள் ஸ்ரீசிவகாமி
இருப்பிடம் திருநெல்வேலியில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் திருவேங்கடநாதபுரம் குன்னத்தூருக்கு தெற்கே உள்ளது. இது சங்காணி சிவன் கோவில் என்று அவ்வூர் மக்களால் அழைக்கப்படுகிறது.

இந்த ஒன்பது கோவில்களையும் ஒரே நாளில் தரிசித்தால் கைலாயத்தை அடைந்த பலன் உண்டு என்பது சான்றோர் வாக்கு. இந்த ஒன்பது கோவில்களில் தரிசனம் செய்தால் நம் பாவங்கள் நீங்குவது மட்டுமின்றி புண்ணியமும் வந்து சேரும்.

இதையும் படிக்கலாம் : நவதிருப்பதி ஸ்தலங்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *