நவராத்திரி பூஜை பாடல்கள்

அம்பா மனம் கனிந்துனது கடைக் கண் பார்
திருவடியிணை துணை என்
அம்பா மனம் கனிந்துனது கடைக் கண் பார்
திருவடியிணை துணை என்
அம்பா மனம் கனிந்துனது கடைக் கண் பார்
திருவடியிணை துணை என் அம்பா

வெம்பவ நோயற அன்பர் தமக்கருளும்
வெம்பவ நோயற அன்பர் தமக்கருளும்
வெம்பவ நோயற அன்பர் தமக்கருள்
கதம்ப வனக் குயிலே கதம்ப வனக் குயிலே
சங்கரி ஜகதம்மா மனம் கனிந்துனது கடைக் கண் பார்
திருவடியிணை துணை என் அம்பா

பைந்தமிழ் மலர்ப் பாமாலை சூடி உன்
பாத மலர் பணிந்து பாடவும் வேண்டும்
பைந்தமிழ் மலர்ப் பாமாலை சூடி உன்
பாத மலர் பணிந்து பாடவும் வேண்டும்
சிந்தையும் என் நாவும் என்னேரமும் நின்
திருப்பெயர் புகழ் மறவாமையும் வேண்டும்
வந்து உலகில் மதி மயங்கி
வந்து உலகில் மதி மயங்கி அறு பகைவர்
வசமாய் அழியாமல் அருள் பெற வேண்டும்
வந்து உலகில் மதி மயங்கி அறு பகைவர்
வசமாய் அழியாமல் அருள் பெற வேண்டும்
இந்த வரம் தருவாய் ஜெகதீஸ்வரி ஆ..
இந்த வரம் தருவாய் ஜெகதீஸ்வரி
என்தன் அன்னையே அகிலாண்ட நாயகியே
எந்தன் அன்னையே அகிலாண்ட நாயகி என்

அம்பா மனம் கனிந்துனது கடைக் கண் பார்
திருவடியிணை துணை என் அம்பா

இதையும் படிக்கலாம் : நவராத்திரி கொலு தாத்பர்யம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *