நோய்களுக்கு நோ சொல்லும் பனங்கருப்பட்டி

நோய்களுக்கு நோ சொல்லும் பனங்கருப்பட்டி

இந்தியாவில் வேறெந்த மாநிலங்களை விடவும் பனைமரங்கள் தமிழகத்தில் மிகுதி. இன்றும் தென் மாவட்டங்களில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை தான் பயன்படுத்தி வருகிறார்கள்.

கிராமப்புறங்களில் கருப்பட்டியின் பயன்பாடு அதிகமாகவே உள்ளது. ஆனால் நகரத்தில் இருக்கும் பலருக்கும் கருப்பட்டி என்கிற ஒன்றை எந்த அளவிற்கு தெரிந்து இருக்கும், என்பது தெரியவில்லை.

சீனி நமக்கு எவ்வளவு பகையோ அதற்கு நேர் மாறாக கருப்பட்டி நம் நெருங்கிய நண்பன்.

வெள்ளை சர்க்கரை பகை

வெள்ளை சர்க்கரையை சாப்பிடும்போது, எவ்வித சத்தும் இல்லாத வெள்ளை சர்க்கரையை ஜீரணிக்கவே உடலில் ஏற்கனவே உள்ள விட்டமின் பி, கால்சியம் போன்ற சத்துக்கள் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. மேலும், தொடர்ந்து சர்க்கரை உண்பதால் ஈரலில் கடுமையான அழுத்தம் ஏற்பட்டு, ஈரலில் கொழுப்பு தேங்கி, அது ‘இன்சுலின்’ சுரப்பில் பாதித்து “சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கிறது.

அதேநேரம், சர்க்கரை உற்பத்தியின் போது கலக்கப்படும் பல்வேறு கெமிக்கல்கள், இதய நோயின் தாக்கத்தை அதிகரிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

மேலும், கேன்சர், கர்ப்பப்பை, கிட்னி, கணையம் என உடலின் முக்கிய உறுப்புகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் கிளீன் போல்ட் ஆக்கி விடுகிறது.

இதற்கும் மேலாக இந்த கெமிக்கல்கள் நம் மூளையை சிறிது சிறிதாக பாதிக்க துவங்குகிறது. நம் மரபணுவையும் பாதித்து அடுத்த தலைமுறையை இயற்கையிலேயே நோயுடைய தலைமுறையாக்குகிறது. இது மட்டுமா இன்னும் பெயர் கண்டறியாத நோய்கள் பல.

இப்படி சர்க்கரை மற்றும் பல நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபட நமக்கு கிடைத்த அருமருந்து தான் கருப்பட்டி. சர்க்கரைக்கு மாற்றாக சரியாக கருப்பட்டியை பயன்படுத்தினாலே இன்று உள்ள பெரும்பாலான நோய்கள் இல்லாமலும் அதற்கான மருத்துவ செலவுகள் மற்றும் மருந்துகள் அவசியமில்லாமலே போகும்.

பனங்கருப்பட்டி நண்பன்

உணவே மருந்து” என்னும் நியதிப்படி, கால சூழலுக்கு ஏற்றார்போல உடலுக்கு தேவையானதை தேவைப்படும் நேரத்தில் வழங்குகிறது கருப்பட்டி. உடல் இயக்கத்தை சீரான சமநிலைக்கும் கொண்டு வருகிறது.

பனங்கருப்பட்டியில் மருத்துவ பயன்கள் சர்க்கரையை விட பல நூறு மடங்கு மிகுதியாக இருக்கின்றன என்றாலும், அதனை நாடுபவர்கள் குறைவே.

பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

விட்டமின்-பி, மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்தும் இதில் அதிகம்.

குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும்.

கருப்பட்டி மற்றும் பனங்கல் கண்டில் எண்ணற்ற விட்டமின்களும், மினரல் சத்துக்களும் உள்ளன. கருப்பட்டி இயற்கையாகவே உடலை குளிர்ச்சியடையச் செய்யும். அதில் உள்ள ‘கிளைசீமி இன்டெக்ஸ்’ உடலில் கலக்கும் சர்க்கரை அளவை, வெள்ளை சர்க்கரையை விட பாதிக்கும் கீழாக குறைக்கிறது.

சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது. கருப்பட்டியை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்புகின்றனர்.

இன்று இருக்கும் நவீன யுகத்தில் வாழும் இளைஞர்களுக்கு ஆண்மைக்குறைவு என்பது அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதனை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டி முக்கிய பங்கு வகிக்கிறது.

கருப்பட்டியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இந்த பிரச்சனை படிப்படியாக நீங்கிவிடும். நன்கு பசி எடுக்க, சீரகம், சுக்கு வறுத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால் போதும். நன்கு பசி எடுக்க துவங்கிவிடும்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த கருப்பட்டியை மறந்து, தீராத நோயை உண்டாக்கும் வெள்ளை சர்க்கரையை தேடித் தேடிப் போய் வாங்கி ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ளவேண்டாம்.

பழந்தமிழர் வாழ்வில் முக்கிய பங்கு வகித்த கருப்பட்டி இன்று தமிழர்களால் முற்றிலும் புறக்கணிக்கப் பட்டுவிட்டது அல்லது மறக்கப்பட்டு வருகிறது என்பது கசக்கும் உண்மைதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *