ஆண்டில் எல்லா மாதத்திலும் வரும் அமாவாசை ஒரு சிறப்பான நாள் தான். அமாவாசை நாளன்று முன்னோர்கள் அனைவரின் ஆசிகளை பெறுவதற்காக உணவு படைத்து வழிபடுவோம். இவ்வாறு வழிபட்டு வந்தால் அவர்களின் ஆசி எந்நாளும் நீக்க இடம்பிடித்து நமக்கு வழிகாட்டும். முன்னோர்களின் ஆசி பெறவேண்டியவர்க்கு அமாவாசை உகந்தது.
அதன்படி தை அமாவாசை மிக சிறப்பாக கொண்டாடப்படும் நாள். அதே போல தான் தமிழ் மாதத்தில் வரும் கடைசி மாதமான பங்குனி மாதத்தில் வரும் அமாவாசையும் சிறப்பான நாள் தான்.
அமாவாசை தினம் என்றாலே அது குலதெய்வ வழிபாட்டிற்கும், முன்னோர்கள் வழிபாட்டிற்கும் உரிய நாளாக தான் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பங்குனி மாதம் வரக்கூடிய அமாவாசை அன்று, நம்முடைய முன்னோர்களையும் குல தெய்வத்தையும் வழிபாடு செய்வதன் மூலம், நம்முடைய வீட்டில் சுப காரிய தடை அகலும்.
ஏதேனும் ஒரு சுப காரியம் நடக்க வேண்டும் என்றால் அதற்கு படாத பாடு படவேண்டியதாக உள்ளது. வீட்டில் நிறைய நல்லது நடக்க வேண்டும் என்றால் இந்த பங்குனி மாத அமாவாசை குலதெய்வ வழிபாடு நமக்கு கைமேல் பலனை அளிக்கும்.
பங்குனி மாத அமாவாசை மார்ச் மாதம் 31.3.2022 ஆம் நாள் மதியம் 1.10 pm மணியிலிருந்து, வெள்ளிக்கிழமை மதியம் 12.45 pm வரை இருக்கின்றது. இவை இரண்டு நாட்கள் சேர்ந்து வந்திருப்பதால் எந்த நாளில் வழிபாடு செய்ய வேண்டும் என்ற குழப்பம் இருக்கும். இந்த பங்குனி மாத அமாவாசையை வியாழக்கிழமை மதிய நேரத்தில் தான் நம்முடைய வீட்டில் வழிபாடு செய்ய வேண்டும். இந்த குறிப்பிட்ட கால நேரமே தர்ப்பணம் கொடுப்பதற்கான சிறந்த நேரம் ஆகும்.
காலையில் சீக்கிரம் எழுந்து குளித்த பின் குளக்கரைக்கு சென்று திதி, தர்ப்பணம் செய்ய வேண்டும். முன்னோர்களுக்கு நம் வீட்டிலேயே செய்த உணவை படைத்தது வழிபடலாம்.
வெள்ளிக்கிழமை அன்று வரும் அமாவாசையில் அம்மனை வழிபட வேண்டும் இந்த அமாவாசை தினத்தில் ஆயில்ய நட்சத்திரகாரர்களும், மகம் நட்சத்திர காரர்களும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
இவர்கள் மனதிற்குள் குலதெய்வ பெயரை உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். மேலும் அனாவசியமாக யாருடைய பிரச்சினைக்கோ, வம்பு சண்டைக்கோ, வீன் வாக்கு வாதத்திற்க்கோ போகக்கூடாது.
இதையும் படிக்கலாம் : முன்னோர்களுக்கு தர்ப்பணம் தர ஏற்ற புண்ணிய தலங்கள்..!
வழிபாடு
அமாவாசைக்கு முந்தைய நாள் பூஜை அறை மற்றும் வீடு முழுவதையும் சுத்தம் செய்ய வேண்டும். அமாவாசை அன்று சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து வீட்டில் உள்ள அனைவரும் தலைக்கு குளித்துவிட்டு அமாவாசை விரதத்தை தொடங்க வேண்டும்.
முன்னோர்களுக்கு பிடித்த உணவை சுத்தபத்தமாக சமைத்து, மதியம் முன்னோர்க்கு படையலிட்டு வழிபாடு செய்த பின் தான் வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிடவேண்டும். மேலும் குலதெய்வத்தின் பெயரை 3 முறை உச்சரித்து, அந்த குலதெய்வத்தை வீட்டிற்கு அழைத்து மனம் குளிர குடும்பத்தோடு வழிபாடு செய்ய வேண்டும்.
முடிந்தால் அமாவாசை அன்று குலதெய்வ கோவிலுக்கு சென்று குலதெய்வ வழிபாடு செய்வதால் வீட்டிற்கு செல்வத்தை பெற்றுத் தரும்.
ஒரு சில சூழ்நிலை காரணமாக அமாவாசை அன்று முன்னோர் வழிபாட்டையோ, குல தெய்வம் வழிபாட்டையோ செய்ய முடியாதவர்கள். ஏழைகள் 3 பேருக்கு வயிறு நிரம்ப சாப்பாடு வாங்கிக் கொடுத்து, அன்னதானம் செய்ய வேண்டும்.