பொங்கல் வைக்க நல்ல நேரம் 2024

எத்தனை பண்டிகைகள் இருந்தாலும், தமிழர்கள் மிகுந்த உற்சாகத்துடனும், ஆரவாரத்துடனும் கொண்டாடும் பண்டிகைகள் இரண்டுதான் – பொங்கல் திருவிழா மற்றும் தீபாவளி. இவ்விரு விழாக்களும் தமிழ் மக்களின் வாழ்வில் கலந்தவை என்றே சொல்ல வேண்டும்.

தைத்திருநாள், தமிழர் திருநாள், பொங்கல் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை, தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு உற்சாகமான பண்டிகையாகும். பொங்கல் எப்படி வைப்பது, எந்த திசையில் வைப்பது, பொங்கல் எந்த திசையில் பொங்க வேண்டும், எந்தப் பூவைத் தொடுப்பது, எந்தெந்தக் காய்கறிகளை சமையலுக்குப் பயன்படுத்துவது என்று பலவிதமான கேள்விகள் நம் மனதில் சுழன்று கொண்டிருக்கின்றன.

போகி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் ஆகிய நான்கு நாட்களையும் மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடுகிறோம்!

அன்றைய தினம் வீட்டு தெய்வங்களை வணங்க வேண்டும். முடிந்ததும், தைத்திர நாளில் சூரியப் பொங்கல் வைக்க வேண்டும். இந்த பொங்கலை நாம் வேறுபாடின்றி உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் சூரிய பகவான் கருணை காட்டியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாட வேண்டும். இந்த பொங்கல் சூரியன் உதிக்கும் நேரத்தில் சரியாக வைக்க வேண்டும். அதுவே சூரிய பொங்கல், சூரிய உதயத்திற்கு முன் பொங்கல் என்பது கூடுதல் சிறப்பு.

வீட்டில் பொங்கல் வைப்பது எப்படி

pongal

சூரியன் உதிக்கும் முன் நம் அனைவருக்கும் எழுந்து பொங்கலை வைப்பது சற்றுக் கடினம். சூரிய பொங்கலை சரியான நேரத்தில் வைக்கலாம். இந்த ஆண்டு மக்களுக்கு பொங்கல் செய்ய போதுமான நேரம் உள்ளது. காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை பொங்கல் வைக்கலாம். இந்த ஏழு மணி நேரம் பொங்கல் வைக்க சிறந்த நேரம்.

வீட்டில் கோலமிட்டு சுத்தம் செய்த பொங்கல் பானையை, அடுப்பில் வைத்து பொங்கல் வைக்க வேண்டும். கரும்பு, இஞ்சி, மஞ்சள், வாழைமரம் மற்றும் என்னென்ன பொருட்கள் எல்லாம் நமக்கு விவசாயிகளால் கிடைக்கிறதே அனைத்தையும் வாங்கி வைத்து நாம் சூரிய பகவானுக்கு படையலிட வேண்டும்.

பொங்கல் வைக்க நல்ல நேரம்

pongal festival

ஒவ்வொரு வீட்டிலும் அதன் சொந்த பழக்க வழக்கங்கள் உள்ளன. சிலர் ஒரு பொங்கல் வைப்பார்கள். சிலர் இரண்டு பொங்கல் வைப்பார்கள். சிலர் கோயிலுக்குச் சென்று பொங்கல் வைத்துவிட்டு வருவார்கள். உங்கள் பழக்க வழக்கங்கள் எதுவாக இருந்தாலும் பொங்கல் வைத்து வழிபடுங்கள்.

இந்த நாளில் பால் மற்றும் சர்க்கரை வைத்து சூரிய பகவானுக்கு நன்றி சொல்ல வேண்டும். புத்தாடை போட்டு, பால், நெய், வெல்லம், சர்க்கரை சேர்த்து பொங்கல் செய்து, அனைத்து நாட்டுக் காய்கறிகளையும் வைத்து குழம்பு அல்லது கூட்டு வைத்து படையலிட வேண்டும். சூரியன் கிழக்கிலிருந்து உதிப்பதால், பொங்கலும் நாம் கிழக்கில் வைக்க வேண்டும்.

சூரிய பொங்கலுக்கு நல்ல நேரம் : காலை 5 மணி முதல் 6 மணி வரை

வீட்டு பொங்கலுக்கு நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 10 மணி வரை மற்றும் காலை 11 முதல் 12 மணி வரை

மாட்டுப் பொங்கல் வழிபாடு

mattu pongal

மாட்டுப்பொங்கல் அன்று மாடு வைத்திருப்பவர் வீட்டில் மிகவும் விசேஷமாக இருக்கும். மாடுகளை குளிக்க வைத்து, கொம்புகளில் வண்ணம் தீட்டி, படையிலிட்டு மாடுகளுக்கு நன்றி சொல்லுவார்கள்.

கிராம புறங்களில் மாலை வேலையில் இந்த மாடுகள் யாவும் ஊர்வலம் வருவதைக் கூட பார்க்கலாம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா ரேஸ் ஆகியவை நடைபெறுவதையும் நாம் கண்டு களிக்கலாம்.
இந்நாளில் முன்னோர்களை வழிபடுவது மிகவும் விசேஷமாகும். முன்னோர்களுக்கு பிடித்த உணவு வகைகளை சமைத்து வைத்து வழிபடலாம். அவர்கள் எப்போதும் உங்களுடன் இருந்து உங்களை ஆசீர்வதிக்கட்டும்.

வழிபாடு நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மதியம் 12 முதல் 3 மணி வரை.

காணும் பொங்கல் கொண்டாட்டங்கள்

kanum pongal

காணும் பொங்கல் என்பது அனைவரும் மகிழக்கூடிய பொங்கல். இந்த நாளில் குடும்பத்தில் உள்ள பெரியவர்களை சந்தித்து ஆசி பெற வேண்டும். ஆசிர்வாதம் செய்யும் போது பெரியவர்களும் குழந்தைகளுக்கு பொங்கல் காசு கொடுத்து மகிழ்ச்சி அடைகிறார்கள். பல நாட்களாக உங்கள் குடும்பத்தினரை பார்க்காவிட்டாலும் இன்று அவர்களை சந்தித்து ஆசி பெறலாம். பொங்கல் திருநாளை நம் வீடுகளில் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்!

அனைவர்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *