பெளர்ணமியில் குலதெய்வ வழிபாடு..!

பெளர்ணமியில் குலதெய்வத்தை மனதார வழிபட்டால், மனதார வேண்டிக்கொண்டால், பெரும் பலன்களைப் பெறலாம். வீட்டில் இருக்கும் மோசமான சூழ்நிலைகளில் இருந்து விடுபடலாம்.

பெளர்ணமி அன்று வானத்தில் முழு நிலவு பிரகாசிக்கும் ஒரு அழகான நாள். இந்த நாளில், அழகான சூழல் உலகம் முழுவதும் பரவும். இத்தகைய சக்தி வாய்ந்த நாளில் அம்மனை வழிபடுவது தீய சக்திகளிடமிருந்து நம்மைக் காக்கிறது.

அம்மன் கோயிலுக்குச் சென்று பெளர்ணமி நன்னாளில் வழிபடுங்கள். வாழ்வில் ஏற்படும் அனைத்து சிரமங்களிலிருந்தும் விடுபடுவீர்கள்.

அதேபோல், வீட்டில் விளக்கு ஏற்றி, லலிதா சஹஸ்ரநாமம் ஜபிப்பதாலும் வீடு, நிலம் போன்ற செல்வம் சேரும் பாக்கியம் கிடைக்கும்.

ஒவ்வொரு பெளர்ணமி இரவிலும் சந்திரன் தோன்றும் போது வீட்டில் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைத்து அம்பாளை வழிபடுவது சிறப்பு. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை நிலவும்.

முக்கியமாக, பெளர்ணமி நாளில் குலதெய்வ வழிபாடு மிகவும் முக்கியமானது. இந்த நன்னாளில் குலதெய்வக் கோயில் அருகில் இருந்தால் சென்று வழிபட்டு வருவது நன்மைகளை வாரி வழங்கும். சந்ததியினர் சிறக்க வாழ்வார்கள்.

குலதெய்வம் சொந்த ஊரில் இருந்தாலோ அல்லது வெளியூரில் இருந்தாலோ, மாதந்தோறும் பெளர்ணமி தினத்தன்று, குலதெய்வக் கோவிலுக்குச் செல்ல முடியாத பட்சத்தில், வீட்டில் தீபம் ஏற்றி குலதெய்வ வழிபாடு செய்யலாம்.

குலதெய்வம் படத்துக்கு மாலை அணிவிக்கலாம் அல்லது மலர்களால் அலங்கரித்து, சர்க்கரைப் பொங்கல் அல்லது வெள்ளைப் பொங்கல் போன்ற உணவுகளை குலதெய்வத்துக்கு படையலிட்டு பிரார்த்தனை செய்யலாம். அண்டை வீட்டாருக்கும் கொடுக்கலாம்.

ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி நன்னாளில் இந்த வழிபாட்டைச் செய்யுங்கள். குலதெய்வப் படத்துக்கு முன்னே குடும்ப சகிதமாக நமஸ்கரித்து வேண்டிக் கொள்ளுங்கள். நம் குடும்பத்தையே வளமாக்கித் தந்தருளும் நம் குல தெய்வம்.

இதையும் படிக்கலாம் : ஐப்பசி பௌர்ணமி சிவனுக்கு அன்னாபிஷேகம் ஏன்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *