புதுச்சேரி மக்களவைத் தொகுதி

புதுச்சேரி மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகியவை இணைந்தது புதுச்சேரி ஒன்றியம். புதுச்சேரி ஒன்றியத்தை 30 சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளனர்.

யூனியன் பிரதேசமான புதுச்சேரி காங்கிரஸுக்கு செல்வாக்கு மிக்க பகுதி. நீண்டகாலமாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே அதிகமான முறை போட்டியிட்டு வென்றுள்ளனர்.

மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்

ஆண்டு

கட்சி

வென்ற வேட்பாளர்

1967 இந்திய தேசிய காங்கிரசு திருமுடி ந. சேதுராமன்
1971 இந்திய தேசிய காங்கிரசு மோகன் குமாரமங்கலம்
1977 அதிமுக அரவிந்த பால பிரஜனர்
1980 இந்திய தேசிய காங்கிரசு ப. சண்முகம்
1984 இந்திய தேசிய காங்கிரசு ப. சண்முகம்
1989 இந்திய தேசிய காங்கிரசு ப. சண்முகம்
1991 இந்திய தேசிய காங்கிரசு எம். ஓ. எச். பரூக்
1996 இந்திய தேசிய காங்கிரசு எம். ஓ. எச். பரூக்
1998 திமுக எஸ்.ஆறுமுகம்
1999 இந்திய தேசிய காங்கிரசு எம். ஓ. எச். பரூக்
2004 பாமக மு. ராமதாஸ்
2009 இந்திய தேசிய காங்கிரசு வே. நாராயணசாமி
2014 அகில இந்திய என். ஆர் காங்கிரஸ் ரா. ராதாகிருஷ்ணன்
2019 இந்திய தேசிய காங்கிரசு வெ. வைத்தியலிங்கம்

14 ஆவது மக்களவைத் தேர்தல் (2004)

பா.ம.க வேட்பாளர் பேராசிரியர் ராமதாஸ் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

பாமக பேராசிரியர் ராமதாஸ் 2,41,653
பாஜக லலிதா குமாரமங்கலம் 1,72,472

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் நாராயணசாமி வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

இந்திய தேசிய காங்கிரசு நாராயணசாமி 3,00,391
பாமக பேராசிரியர் ராமதாசு 2,08,619
தேமுதிக ஆசனா 52,638

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

என் ஆர் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

என் ஆர் காங்கிரஸ் ராதாகிருஷ்ணன் 2,55,826
இந்திய தேசிய காங்கிரசு நாராயணசாமி 1,94,972
அதிமுக எம். வி. ஓமலிங்கம் 1,32,657

17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் வெ. வைத்தியலிங்கம் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

இந்திய தேசிய காங்கிரசு வெ. வைத்தியலிங்கம்

இதையும் படிக்கலாம் : தமிழக மக்களவைத் தொகுதிகள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *