சிவராத்திரி அன்று சொல்ல வேண்டிய சுலோகம்..!!

த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரிநேத்ரஞ்ச த்ரியாயுதம்
த்ரிஜன்ம பாபஸம்ஹாரம் ஏகபில்வம் சிவார்ப்பணம்
காசி க்ஷேத்ர நிவாஸஞ்ச காலபைரவ தர்சனம்
கயா ப்ரயாகேத் வேத்ருஷ்ட்வா ஏகபில்வம் சிவார்ப்பணம். – பில்வாஷ்டகம்

பொருள்

3 இதழ்களைக் கொண்டது வில்வ இலை. இம்மூன்றுமே சத்வ, ரஜோ, தமோ குணங்களைக் குறிக்கக்கூடியது. இவை இறைவனின் மூன்று கண்களையும் நினைவுபடுத்துகின்றன. பால்யம், யௌவனம், வயோதிகம் ஆகிய மூன்று பருவங்களை அளிப்பதும், மூன்று ஜென்ம பாவங்களைப் போக்குவதும் இந்த வில்வ இலையின் தனி குணம்.

பரமேஸ்வரா, இந்த வில்வத்தை நான் உனக்கு அர்ப்பணிக்கிறேன். காசி என்ற புனிதத்தலத்தில் வசித்தல், அங்குள்ள காலபைரவரைத் தரிசித்தல், கயை, பிரயாகை போன்ற தலங்களுக்குச் சென்று தரிசித்தல் ஆகியவற்றால் எத்தனை புண்ணியம் சேருமோ, அவை அத்தனையும் இந்த ஒரே ஒரு வில்வ இலையை இறைவனுக்கு அர்ப்பணிப்பதால் என்னைச் சேரும் என்பதை உணர்கிறேன் உமக்கு நமஸ்காரம்.

இதையும் படிக்கலாம் : சிவராத்திரி அன்று விரதம் இருந்து வழிபடுவது எப்படி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *