சிறுவாபுரி முருகன் வேல் 108 போற்றி..!

1. ஓம் சீர்மிகு செந்தில் போற்றி
2. ஓம் யீதருத் தணிகை வேல் போற்றி
3. ஓம் பழநி வேல் போற்றி
4. ஓம் பரங்குன்றக் குமரன் வேல் போற்றி
5. ஓம் ஏரகத்து எம்மான் வேல்போற்றி
6. ஓம் அழகர் மலை அழகன் வேல் போற்றி
7. ஓம் குன்றுதோறாடும் குழகன் வேல் போற்றி
8. ஓம் தனி வேல் போற்றி
9. ஓம் சுடர் வேல் போற்றி
10. ஓம் செவ் வேல் போற்றி

11. ஓம் வெற்றி வேல் போற்றி
12. ஓம் நல்வேல் போற்றி
13. ஓம் அயில் வேல் போற்றி
14. ஓம் பெரு வேல்போற்றி
15. ஓம் பருவே வேல் போற்றி
16. ஓம் கருணை வேல் போற்றி
17. ஓம் முரண வேல் போற்றி
18. ஓம் அழகு வேல் போற்றி
19. ஓம் கனக வேல் போற்றி
20. ஓம் வச்சிர வேல் போற்றி

21. ஓம் வைர வேல் போற்றி
22. ஓம் மாணிக்க வேல் போற்றி
23. ஓம் தங்க வேல் போற்றி
24. ஓம் சதுர் வேல் போற்றி
25. ஓம் சான்விமுளை வேல் போற்றி
26. ஓம் கூர் வேல் போற்றி
27. ஓம் ஜய வேல் போற்றி
28. ஓம் வடிவேல் போற்றி
29. ஓம் திணி வேல் போற்றி
30. ஓம் அருள் வேல் போற்றி

31. ஓம் ஓம், ஐம் ரீம் வேல் போற்றி
32. ஓம் கதிர் வேல்போற்றி
33. ஓம் வீர வேல் போற்றி
34. ஓம் தீர வேல் போற்றி
35. ஓம் ஐ வேல் போற்றி
36. ஓம் தாரை வேல் போற்றி
37. ஓம் செவ்வேள் திருக்கை வேல் போற்றி
38. ஓம் வாரிகுளித்த வேல் போற்றி
39. ஓம் முத்தையனார்கை வேல் போற்றி
40. ஓம் கொற்ற வேல் போற்றி

41. ஓம் சூர்மார்பு தொளைத்த வேல் போற்றி
42. ஓம் குன்று எறிந்த வேல் போற்றி
43. ஓம் வினைதீர்க்கும் வேல் போற்றி
44. ஓம் இடர் களையும் வேல்போற்றி
45. ஓம் ஞான வேல் போற்றி
46. ஓம் குமர வேல்போற்றி
47. ஓம் சக்தி வேல் போற்றி
48. ஓம் குழந்தை வேல் போற்றி
49. ஓம் நீதி வேல் போற்றி
50. ஓம் புனித வேல் போற்றி

51. ஓம் துணை வேல் போற்றி
52. ஓம் என் இதயவேல் போற்றி
53. ஓம் எனை காக்கும் வேல்போற்றி
54. ஓம் துன்பம் போக்கும் வேல் போற்றி
55. ஓம் துயர் துடைக்கும் வேல் போற்றி
56. ஓம் இன்பம் அளிக்கும் வேல் போற்றி
57. ஓம் அடர் வேல்போற்றி
58. ஓம் வைவேல் போற்றி
59. ஓம் ஒளி திகழ் வேல் போற்றி
60. ஓம் பகை கெடுக்கும் வேல் போற்றி

61. ஓம் பலமளிக்கும் வேல் போற்றி
62. ஓம் பயம் போக்கும் வேல்போற்றி
63. ஓம் புலமை நல்கும் வேல்போற்றி
64. ஓம் சித்தி தரும் வேல் போற்றி
65. ஓம் முக்தி தரும் வேல் போற்றி
66. ஓம் அடியாரோடிணைக்கும் வேல் போற்றி
67. ஓம் அன்பை வழங்கும் வேல் போற்றி
68. ஓம் பிணியைப் போக்கும் வேல் போற்றி
69. ஓம் பிறவாமை அருளும் வேல் போற்றி
70. ஓம் நல்லன எல்லாம் தரும் வேல் போற்றி

71. ஓம் தனம் தரும் வேல் போற்றி
72. ஓம் தளர் வறியா மனம் தரும் வேல் போற்றி
73. ஓம் தெய்வ வடிவம் தரும் வேல் போற்றி
74. ஓம் சினம் கெடுக்கும் வேல் போற்றி
75. ஓம் காலனைக் கடியும் வேல் போற்றி
76. ஓம் காவலாய் வரும் வேல் போற்றி
77. ஓம் கவலையெல்லாம் போக்கும் வேல் போற்றி
78. ஓம் நெய் வைத்த வேல் போற்றி
79. ஓம் கேடில் வேல் போற்றி
80. ஓம் சிங்கார வேல் போற்றி

81. ஓம் அடியார் உள்ளத்தில் இருக்கும் வேல் போற்றி
82. ஓம் அன்பர்க்கருகில் இருக்கும் வேல் போற்றி
83. ஓம் வம்பர்களை வாட்டும் வேல் போற்றி
84. ஓம் துஷ்டர்கள் கைதுணிக்கும் வேல் போற்றி
85. ஓம் குறை தீர்க்கும் வேல்போற்றி
86. ஓம் குற்றம் களையும் வேல் போற்றி
87. ஓம் எழில் வேல் போற்றி
88. ஓம் அண்டினரைக்காக்கும் வேல் போற்றி
89. ஓம் அசுரர்களை அழித்த வேல் போற்றி
90. ஓம் அமரர்க் கபயம் அளித்த வேல் போற்றி

91. ஓம் அடியவர் துயரை அழித்திடும் வேல் போற்றி
92. ஓம் அழல் வேல் போற்றி
93. ஓம் சிந்து வேல் போற்றி
94. ஓம் சித்திர முனை வேல்போற்றி
95. ஓம் துங்கத் தனி வேல் போற்றி
96. ஓம் பேர் பெரிய வேல் போற்றி
97. ஓம் மந்த்ர வேல் போற்றி
98. ஓம் வெற்றி முனை வேல்போற்றி
99. ஓம் குன்றம் பிளந்த வேல் போற்றி
100. ஓம் அகிலமெலாம் போற்றும் வேல்போற்றி

101. ஓம் எண்ணியதை எளிதில் தரும் வேல் போற்றி
102. ஓம் ஏக்கத்தைப் போக்கும் வேல்போற்றி
103. ஓம் என்றும் எங்கும் இருக்கும் வேல் போற்றி
104. ஓம் இன்பமே தரும் இனிய வேல் போற்றி
105. ஓம் சஷ்டிநாதன் கைவேல் போற்றி
106. ஓம் குராவடிக் கோமான் கை வேல் போற்றி
107. ஓம் நவரத்தின வேல் போற்றி
108. ஓம் சீர்மிகு சிறுவாபுரி செல்வன் கைவேல் போற்றி போற்றி!!!

இதையும் படிக்கலாம் : வெற்றி தரும் முருகன் துதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *