சுக்கான் கீரையின் மருத்துவ பயன்கள்..!

சுக்கான் கீரையை நாம் உணவில் பயன்படுத்தியதில்லை. இதில் உள்ள சத்துக்கள் தெரிந்தால் இதை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக்கொள்வோம். சுக்கான் கீரையை சுக்குக் கீரை, சொக்கான் கீரை என்றும் சொல்வார்கள்.

பொதுவாக, கீரையை சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை வராது. இருப்பினும், இந்த சுக்கன் குடல், கழிவுகள் மற்றும் நச்சுகளை எளிதில் சுத்தப்படுத்தும். அஜீரணத்தை போக்கும். வாயு பிரச்சனை தீரும்.

வழக்கமான கீரையைப் போலவே, இந்த கீரையையும் சமைத்து சாப்பிடலாம் அல்லது சட்னி செய்து சாப்பிடலாம். குடல் புண் குணமாக வேண்டுமானால் இந்த கீரையை பருப்பு சேர்த்து சமைக்கும் போது புளி சேர்க்காமல் சமைக்க வேண்டும். இல்லையெனில், சட்னி போல் சாப்பிட விரும்பினால், இந்த சுக்கன் கீரையை பூண்டு, வெங்காயம் சேர்த்து வறுத்து, சட்னியாக அரைத்து சாப்பிடலாம். அஜீரணக் கோளாறால் அவதிப்படுபவர்களுக்கு இந்த சட்னி சிறந்த தீர்வாகும்.

சுக்கான் கீரையில் உள்ள சத்துக்கள்

சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, மணிச்சத்து, வைட்டமின் A, C, தயாமின், என ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன.

ரத்த அழுத்தம்

சுக்கான் கீரை இதயத்தைப் பாதுகாக்கிறது. .குறிப்பாக ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த கீரை வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இரத்த அழுத்தம் சாதாரணமாக இருந்தால், இதயம் பாதுகாக்கப்படும். எனவே கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டால் ரத்த அழுத்த பிரச்சனை வராமல் தடுக்கலாம். இரத்தத்தையும் சுத்தப்படுத்துகிறது. இந்த கீரை வயதாவதால் ஏற்படும் எலும்பு தேய்மானம் மற்றும் மூட்டுவலியைத் தடுக்கிறது.

எலும்புகளுக்கும், பற்களுக்கும் வலுவை தரும் கால்சியம் சத்து இதில் நிறைத்து உள்ளது. அதனால்தான், இந்த கீரையை பல்துலக்கவும் பயன்படுத்துவார்கள்.. சுக்கான் கீரையை நிழலில் உலர்த்தி தூளாக்கி, அதில்  பல் தேய்த்து வருவதால், பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். கால்சியமும், இரும்புச்சத்தும் நிறைய உள்ள இக்கீரையை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்கலாம்.

கல்லீரல்

அதே போல சுக்கான் கீரைகளை சூப்பாக வேகவைத்து குடிக்கலாம். கல்லீரல் ஆபத்தில் இருந்து விடுபட வேண்டுமானால் சுக்கான்  கீரை சூப் அருந்தலாம். இக்கீரை கல்லீரலை பாதுகாக்கும். பித்தம் குறைந்து கல்லீரல் வலுவடையும். மஞ்சள் காமாலை சிகிச்சைக்கு இது ஒரு சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால், நெஞ்செரிச்சல் நீங்கும். தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், எலும்பு தேய்மானம் பிரச்சனை உள்ளவர்கள், மூட்டுவலி பிரச்சனை உள்ளவர்கள் கூட இந்த சூப்பை குடித்தால் போதுமான பலன் கிடைக்கும்.

இதையும் படிக்கலாம் : கீரைகளும் அதன் அற்புத பயன்களும்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *