தென்காசி மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் தென்காசி மக்களவைத் தொகுதி 37வது தொகுதி ஆகும். இத்தொகுதி ஆனது, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தனித்தொகுதி ஆகும்.

சட்டமன்ற தொகுதிகள்

தென்காசி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  • இராஜபாளையம்
  • திருவில்லிபுத்தூர் (தனி)
  • சங்கரன்கோவில்(தனி)
  • வாசுதேவநல்லூர் (தனி)
  • கடையநல்லூர்
  • தென்காசி

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல் ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம் மொத்தம்
17 ஆவது

(2019)

7,32,490 7,56,376 78 14,88,944
18 ஆவது

(2024)

6,46,907 6,74,616 156 13,21,679

மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்

ஆண்டு கட்சி வென்ற வேட்பாளர்
1957 இந்திய தேசிய காங்கிரசு எம். சங்கரபாண்டியன்
1962 இந்திய தேசிய காங்கிரசு எம். பி. சாமி
1967 இந்திய தேசிய காங்கிரசு ஆர். எஸ். ஆறுமுகம்
1971 இந்திய தேசிய காங்கிரசு செல்லச்சாமி
1977 இந்திய தேசிய காங்கிரசு மூ. அருணாச்சலம்
1980 இந்திய தேசிய காங்கிரசு மூ. அருணாச்சலம்
1984 இந்திய தேசிய காங்கிரசு மூ. அருணாச்சலம்
1989 இந்திய தேசிய காங்கிரசு மூ. அருணாச்சலம்
1991 இந்திய தேசிய காங்கிரசு மூ. அருணாச்சலம்
1996 தமிழ் மாநில காங்கிரசு மூ. அருணாச்சலம்
1998 அதிமுக எஸ். முருகேசன்
1999 அதிமுக எஸ். முருகேசன்
2004 சிபிஐ எம். அப்பாதுரை
2009 சிபிஐ பி. லிங்கம்
2014 அதிமுக வசந்தி முருகேசன்
2019 திமுக தனுஷ் எம். குமார்

14 ஆவது மக்களவைத் தேர்தல் (2004)

சி.பி.ஐ வேட்பாளர் அப்பாத்துரை வெற்றி பெற்றார்.

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள்
சிபிஐ அப்பாத்துரை 3,48,000
அதிமுக முருகேசன் 2,25,824
புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி 1,01,122

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

இந்திய பொதுவுடமைக் கட்சி வேட்பாளர் பி. லிங்கம் வெற்றி பெற்றார்.

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள்
இந்திய பொதுவுடமைக் கட்சி பி. லிங்கம் 2,81,174
இந்திய தேசிய காங்கிரசு வெள்ளைபாண்டி 2,46,497
புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி 1,16,685

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

அ.தி.மு.க வேட்பாளர் வசந்தி முருகேசன் வெற்றி பெற்றார்.

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள்
அதிமுக வசந்தி முருகேசன் 4,24,586
புதிய தமிழகம் / திமுக டாக்டர் கிருஷ்ணசாமி 2,62,812
மதிமுக சதன் திருமலை குமார் 1,90,233

17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

தி.மு.க வேட்பாளர் தனுஷ் எம். குமார் வெற்றி பெற்றார்.

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள்
திமுக தனுஷ் எம். குமார் 4,76,156
அதிமுக க. கிருஷ்ணசாமி 3,55,870
அமமுக எஸ். பொன்னுத்தாய் 92,116

இதையும் படிக்கலாம் : திருநெல்வேலி மக்களவைத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *