திருவிளக்கு பஜனை பாடல் வரிகள்..!

திருவிளக்கே திருவிளக்கே தேவி பராசக்தி திருவிளக்கே தேவியின் வடிவே திருவிளக்கே தேவியே உனக்கு நமஸ்காரம்

இருளை அகற்றும் திருவிளக்கே இன்பம் அளிக்கும் திருவிளக்கே
எங்கும் ஒளிதரும் திருவிளக்கே லக்ஷ்மி உனக்கு நமஸ்காரம்

மங்கள ஜோதியாம் திருவிளக்கே மாலையில் ஒளி தரும் திருவிளக்கே . காலையில் ஒளிதரும் திருவிளக்கே சரஸ்வதி உனக்கு நமஸ்காரம்

திருமகள் வடிவே திருவிளக்கே தேவரும் பணியும் திருவிளக்கே தெள்ளிய ஜோதியே திருவிளக்கே சாரதே உனக்கு நமஸ்காரம்

அஷ்டலக்ஷ்மி வடிவே திருவிளக்கே ஆனந்த நர்த்தினி திருவிளக்கே ஆலய பூஷணி திருவிளக்கே ஆதிபராசக்தி நமஸ்காரம்

பாக்கிய லக்ஷ்மியாம் திருவிளக்கே பக்தியை அளித்திடும் திருவிளக்கே பதவியைத் தந்திடும் திருவிளக்கே பவானி உனக்கு நமஸ்காரம்

ஜெகமெல்லாம் விளங்கும் திருவிளக்கே ஜெகதீஸ்வரி வடிவே திருவிளக்கே அழகை அளிக்கும் திருவிளக்கே அம்மா உனக்கு நமஸ்காரம்

சௌந்தர்ய ரூபிணி திருவிளக்கே
சந்தான பலம்தரும் திருவிளக்கே சம்பத்தை அளிக்கும் திருவிளக்கே சக்தியே உனக்கு நமஸ்காரம்.

இதையும் படிக்கலாம் : கற்பூர ஆரத்தி பாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *